(Reading time: 20 - 39 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

தொடர்கதை - பூவா? தலையா? - 15 - சசிரேகா

கோவலன் விடுதலையான செய்தி அனைத்து மீடியா செய்திதாள்களிலும் வெளிவந்தது, இதனால் அவனது கல்லூரி மாணவர்கள் சந்தோஷமடைந்தார்கள், கோவலனும் தான் தப்பித்துவிட்டோம் என நினைத்து நிம்மதி பெருமூச்சுவிட அவனது ஒரு பக்க கையை பிடித்துக் கொண்டாள் கண்ணகி. அதைக்கண்டு அவன் மகிழ்ந்தான், அவனது இன்னொரு பக்க கையை பிடித்துக் கொண்டாள் மாதவி, அதைக்கண்டு அவன் திடுக்கிட்டான். இரு பெண்களும் கோவலனது மார்பில் நிம்மதியாக சாய்ந்துக் கொண்டனர், இவ்விருவரின் செயலால் கோவலனது நிம்மதிதான் பறிபோனது.

  

அப்படியே அம்மூவரும் வீடு திரும்பினார்கள், வீட்டிற்கு வந்த கோவலன் சோர்வாக ஹாலில் இருந்த சோபாவில் அமர அவனுக்கு இடபக்கம் கண்ணகியும் வலப்பக்கம் மாதவியும் அமர்ந்துக் கொண்டார்கள், அதைக்கண்டு திடுக்கிட்டான் கோவலன்

  

கண்ணகியோ

  

”எப்படியோ உங்களை நாங்க காப்பாத்திட்டோம், இல்லைன்னா என்ன ஆயிருக்கும், எங்க வாழ்க்கையும் முடிஞ்சிப் போயிருக்கும்” என சொல்ல மாதவியோ

  

”உண்மைதான் நீங்க இல்லாத வாழ்க்கையை எங்களால நினைச்சி கூட பார்க்க முடியாது” என்றாள் இருவரின் பேச்சைக் கேட்ட கோவலனோ

  

”நீங்க எப்போ ஒண்ணு சேர்ந்தீங்க” என கேட்க அவர்கள் குழம்பினார்கள்

  

”என்ன உளர்றீங்க நாங்க எப்போ பிரிஞ்சோம் இப்ப ஒண்ணு சேர்றதுக்கு”

  

”நான் நட்பு ரீதியா சொல்லலை, என் விசயத்தில சொன்னேன்”

  

”புரியலையே” என்றனர் இருவரும்

  

”இல்லை என் விசயத்தில நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒண்ணா இருக்கறது பார்க்கறப்ப ஆச்சர்யமா இருக்கு, ஆமா உங்க மனசுல என்னதான் இருக்கு” என கேட்க கண்ணகியோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.