(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 74 - பிந்து வினோத்

74. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

விவேக் அலுப்புடன் அதை சொன்ன விதம் லாவண்யாவை யோசிக்க வைத்தது. அவளுக்கு அவனை பல வருடங்களாகவே தெரியும். ஆனால், இப்படி ‘எமோஷனலாக முடிவு எடுக்கும் விவேக் மிகவும் புதியவன்! ஆனால், அவனின் மனநிலையை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. எனவே, அவனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என முகத்தில் அடிப்பது போல சொல்லாமல் மென்மையாகவே பேசினாள்!

   

இப்படி செய்யாத விவேக்... நீ என்ன தான் சொன்னாலும் பாரதி கிட்ட உண்மையை சொல்றது தான் எனக்கு என்னவோ நல்லதுன்னு தோணுது...”

  

வேண்டாம் லாவி... அவளுக்கு தெரியாம இருக்கிறது தான் அவளுக்கு நல்லது...”

   

சரி அதை அப்புறம் பார்ப்போம்... அதுக்காக நீ இப்படியே இருக்க முடியாது... நான் நாளைக்கே பெரிய டாக்டர் யார் கிட்டேயாவது அப்பாயின்ட்மென்ட் வாங்குறேன்... மெடிகல் ஃபீல்ட் ரொம்ப முன்னேறி இருக்கு விவேக். தேவைப் பட்டா, அமெரிக்கா, இங்க்லாந்து எங்கேயாவது போய் கூட நீ ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம்...”

   

“இல்லை வேண்டாம் லாவி... நடக்காதுன்னு தெரிஞ்சும் எதிர்பார்ப்பை வளர்த்துட்டு, அது இல்லாம போறது ரொம்ப கொடுமை! அதெல்லாம் வேண்டாம்ப்பா...”

   

“விவேக், நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத, இது மாதிரி நேரத்தில உன்னுடைய முதல் எதிரி சுய இரக்கம் தான்... உன் மனசு தைரியமா இருந்தாலே எல்லாத்தையும் எதிர் கொள்ளலாம்... எப்போவும் நீ சொல்ற ஹெலன் கெல்லர் கதை எல்லாம் எங்களுக்கு மட்டும் தானா, உனக்கு கிடையாதா? நடக்காது, எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு புலம்புறதை நிறுத்து! எனக்கு தெரிஞ்ச என்னோட ஸ்மார்ட் ஃப்ரென்ட் விவேக் மாதிரி பேசு!”

  

ம்ம்ம்...”

  

நீ டாக்டர் கன்சல்ட் செய்றது, ட்ரீட்மென்ட் எடுத்துக்குறது எல்லாம் ஆப்ஷனல் கிடையாது, செஞ்சே தீர வேண்டிய விஷயங்கள்! முதல்ல வேற நல்ல டாக்டரை பார்ப்போம்... உன்னுடைய பழைய மெடிகல் ரிப்போர்ட் எல்லாம் இருக்கு தானே?”

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.