(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

ம்ம்ம்... வீட்டில இருக்கு... நாளைக்கு ஈவ்னிங் டாக்டர் தாமஸோட அப்பாயின்ட்மென்ட்டும் இருக்கு... நான் ஒரு அப்பாயின்ட்மென்ட் ஸ்கிப் செய்துட்டேன்னு தொடர்ந்து ஃபோன் கால், மெசேஜ்ன்னு தொல்லை செய்துட்டு இருக்காங்க... நான் தான் ரெஸ்பான்ட் செய்யலை... ட்ரீட்மென்ட்டா கீமோதெரபி செய்றதா இருந்தா, நான் இந்த விஷயத்தை மறைக்க முடியாதே... உண்மையை சொல்லி ஆகணுமே...”

  

அதுக்கெல்லாம் வேற ஏதாவது ஐடியா யோசிக்கலாம் விவேக்! அந்த அப்பாயின்ட்மென்ட் ஈவ்னிங் தானே, அது அப்படியே இருக்கட்டும். பேரலலா, வேற டாக்டர் கன்சல்ட் செய்ய முடியுதான்னும் பார்ப்போம்... நான் உனக்கு நல்ல டாக்டர் கண்டுப்பிடிச்சு, அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் செய்துட்டு கால் செய்றேன்...”

  

சரி லாவி...!”

   

‘உன் விருப்பம் போல செய்’, என்பதுப் போல சொன்னவனை லாவண்யாவும் மேலே கேள்விகள் கேட்டு டிஸ்டர்ப் செய்யவில்லை!

  

🌼🌸❀✿🌷

   

அன்று இரவு, பத்து மணி அளவில் விவேக்கை செல்ஃபோனில் அழைத்தாள் லாவண்யா!

  

விவேக், சூர்யா ஹாஸ்பிட்டல்ல ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்கார்... ரொம்ப கஷ்டப்பட்டு உனக்காக காலையில அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன்... நாம இரண்டுப் பேரும் போகலாம். நீ உன்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா...”

  

சரி லாவி, நானே உன் வீட்டுக்கு வந்து உன்னை பிக்கப் செய்றேன்... எத்தனை மணிக்கு வரணும்னு சொல்லு...”

  

உன்னால முடியுமாடா...?”

  

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.