“முடியும் லாவி, கவலைப் படாதே... டைம் மட்டும் சொல்லு... நான் வந்திடுறேன்...” விவேக்கிற்கு இப்போதும் நம்பிக்கை எதுவுமில்லை! ஆனால் லாவண்யாவிற்காக புது ஸ்பெஷலிஸ்ட் பார்ப்பது என முடிவு எடுத்துக் கொண்டான்!
🌼🌸❀✿🌷
மற்ற நாட்களை விட கொஞ்சம் முன்பாகவே தூக்கம் கலைந்து கண் விழித்த கமலா, சமையலறையில் விளக்கு எரிவதை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்! பொதுவாக பவித்ரா ஆறரை மணிக்கு மேல் தான் சமையல் வேலையை துவங்குவாள்.
“என்ன பவித்ரா, இவ்வளவு காலையிலேயே?” என்ற கேள்வியுடன் சமையலறையினுள் நுழைந்த கமலா அங்கே அவளின் மருமகளுக்கு பதில் பாரதி இருப்பதை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்.
“நீ என்ன செய்ற பாரதி? தூங்கலையா?”
“தூக்கம் வரலை அம்மா... சரி பவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாமேன்னு வந்தேன்... உங்களுக்கு காஃபி ரெடியா இருக்கு, இந்தாங்க... சர்க்கரை ரொம்ப கம்மியா போட்டு இருக்கேன்... ஓகே’வான்னு பாருங்க...”
“நீ எதுக்கு பாரதி இதெல்லாம் செஞ்சுட்டு?” என்று கேள்வி கேட்டப் போதும், மனதினுள் ஆச்சர்யப் பட்டாள் கமலா!
இதுவரை பாரதி அவர்கள் வீட்டிற்கு பல முறை வந்திருக்கிறாள், தங்கியும் இருக்கிறாள். ஆனால் எப்போதும் கொஞ்சம் ஒதுங்கியே தான் இருப்பாள். இது போல உரிமையுடன் எப்போதுமே இருந்தது இல்லை!
“இதுல என்னம்மா இருக்கு?” என பாரதி அவளின் பேச்சிற்கு பதில் சொல்லவும், பாரதியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே,