பாரதிக்கு மூச்சு விடவும் கூட சிரமமாக தான் இருந்தது! ஆனால் விவேக்கின் அந்த அணைப்பு அவளுக்கு தேவையானதாகவும் இருந்தது!
“ஐ மிஸ்ட் யூ ஸோ மச் ரதி...”
கரகரப்பான குரலில் அவளின் காதோரம் முணுமுணுத்த விவேக், இன்னும் அதிகமாக அவளை அவனுடன் சேர்த்து இறுக்கி கொண்டான்!
ஏற்கனவே அவனின் இறுகிய அணைப்பில் தடுமாறிக் கொண்டிருந்தவள், இப்போது இன்னும் அதிகமாக தடுமாறினாள்... ஆனாலும் அவனை விலக்க அவளுக்கு மனம் வரவில்லை!
விவேக் காதோரம் சொன்ன வார்த்தைகளும், அதன் தொடர்ச்சியாக அவளின் காதுமடலில் பதிந்த அவனின் உதடுகளும் அவளை சிலிர்க்க வைத்தது!
அசையாமல், கணவனின் அணைப்பையும் முத்தத்தையும் ரசித்து நின்றாள் பாரதி!
மேலும் சில நிமிடங்கள் இருவரும் அப்படியே நின்றிருந்தார்கள்...
பின் மெதுவாக பாரதியை அவனின் அணைப்பில் இருந்து விடுவித்த விவேக், அவளின் முகத்தை நேராகப் பார்த்து,
“திரும்ப உன் பக்கத்தில் வர கூட சான்ஸ் இருக்காதுன்னு நினைச்சேன் ரதி... ஐ ஆம் ஸோ வெரி லக்கி...” என்று சொல்லிவிட்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
பாரதி என்ன சொல்வது என்று புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும்... அந்த பார்வையில் கவரப் பட்டு, மீண்டும் அவளை அணைத்துக் கொண்டு அவளின் இதழ்களில் மெல்ல முத்தமிட்டான்... பின், மீண்டும் மீண்டும் மீண்டும் முத்தமிட்டான்... பாரதி இப்போதும் அவனை தடுக்க முயற்சிக்கவில்லை... ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவளைப் போல நின்றிருந்தாள்.