(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 20 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ராஜமை தனியாக அழைத்துச் சென்ற ஜெயந்தி,

  

“மேடம், சார் அன்னைக்கு ஒரு சொந்தக்கார பொண்ணு பத்தி சொன்னார்... அது...” என ப்ரியா இருந்தப் பக்கம் சுட்டிக் காண்பித்துக் கேட்டாள்.

  

ஜெயந்தியின் கேள்வி புரிந்ததாக தலையை அசைத்தாள் ராஜம்!

   

“அது ப்ரியா தான்... உங்க வீட்டுல அவர் கனடால வேலை செய்ற சொந்தக்காரப் பையன் பத்தி சொன்னாருன்னு இவரு சொன்னார்...”

  

“ஆமாம் என்னோட அக்கா மகன் தான் அது... ப்ரியா ரொம்ப நல்லப் பொண்ணு... எனக்கு ஸ்கூல்ல ரொம்ப உதவியா இருப்பா... ஒரு சின்ன துரும்பு எடுத்து போட்டுட்டு பத்து உதவி கேட்குற இந்த காலத்தில, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஹெல்ப் செய்றவ...”

  

“தெரியும் ஜெயந்தி... எங்களுக்கு ரொம்ப தெரிஞ்ச குடும்பம்... அது தான் ப்ரியாவுக்காக இவர் தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் சொல்லி வைக்கிறார்...”

  

“சார் பொண்ணு டீச்சர்ன்னு சொன்னார்... நானும் என்ன ஸ்கூல் ஏதுனு எல்லாம் எதுவும் கேட்கலை... ப்ரியா எனும் போது கேள்வியே இல்லை... நான் அக்கா கிட்ட பேசுறேன்...”

  

“ரொம்ப தேங்க்ஸ் ஜெயந்தி... ப்ரியாக்கு நல்ல விதமா, அவளுக்கு பிடிச்ச மாதிரி அலையன்ஸ் அமைஞ்சா நல்லா இருக்கும்!”

  

“அதெல்லாம் நல்ல படியா நடக்கும் மேடம்,” என்ற ஜெயந்தி தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் பரிச்சயமான மற்றவர்கள் பற்றி பேசத் தொடங்கினாள்!

  

🌼🌸❀✿🌷

   

ஸ்ரீயும், கோகிலாவும் வர்ஷாவிடம் கதைப் பேசிக் கொண்டிருக்க, ப்ரியா அதே இடத்தில் இருந்தாலும் அந்த பேச்சில் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்!

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.