மூலையில் அமர்ந்து உணவை கொறித்துக் கொண்டிருந்தார்கள்.
சமையல் செய்யும் கஸ்தூரி அவர்கள் இருவருக்கும் உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தனியே விட்டு விட்டு கிளம்பி சென்று முழுதாக ஒரு நாள் ஆகி இருந்தது! அவர்கள் கிளம்பிப் போனது முதலே அந்த வீடு அமைதியாகி போயிருந்தது!
கிருத்திகா அந்த பெரிய வீட்டில் ஒரு பக்கம் இருக்க, தியாகு மற்றொரு பக்கம் இருந்தான்! இருவரும் பேசவும் இல்லை, பேச முயற்சிக்கவும் இல்லை!
“கஸ்தூரி, நீ தூங்கு! மீதி வர சாப்பாடை நானே ஃப்ரிட்ஜ்ல எடுத்து வச்சிடுறேன்...” என்றான் தியாகு.
கேள்வியாக ஒரு பார்வை கூட பார்க்காமல், “சரிங்க சார்,” என உடனடியாக ஏற்றுக் கொண்டாள் கஸ்தூரி.
சமையலறையில் பாத்திரங்களை எடுத்து ஒழுங்குப் படுத்தி வைத்து விட்டு கஸ்தூரி கிளம்பி சென்றாள். அவள் அவளின் அறைக்கு செல்லும் வரை காத்திருந்த தியாகு, பிறகு, மனைவியைப் பார்த்து, “கீர்த்தி,” என்றழைத்தான்!
அமைதியாக அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் கிருத்திகா.
தியாகுவிற்கு அவர்களின் முதல் சந்திப்பு நினைவில் வந்தது...
அப்போது போலவே இப்போதும் கேள்வியுடன் விழிகளை விரித்து பார்க்கும் அவளின் அந்தப் பார்வை அவனை கவர்ந்தது!
மனம் போகும் போக்கை உணர்ந்து, அவசரமாக தன்னை சமாளித்துக் கொண்டவன், கிருத்திகாவிடம் இருந்து பார்வையை திருப்பி தட்டில் இருந்த உணவை பார்த்தப் படி பேசினான்...