(Reading time: 5 - 10 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

நான் உண்மையை சொன்னதால அத்தை மாமா கூட நீ கிளம்பிடுவேன்னு நினைச்சேன்... பட் பரவாயில்லை... இங்கே நீ உனக்கு பிடிச்ச மாதிரி ஃப்ரீயா இருக்கலாம்... ஆனால் என்னை மட்டும் எந்த கேள்வியும் கேட்க கூடாது...”

  

கிருத்திகா அவனை பார்த்து அனல் கொதிக்க முறைத்தாள்!!!

  

அதை கவனிக்காமல், “எப்படியும் நாம பிரிய போறோம்... அதனால ஸ்பவுசா இல்லைனா என்ன, ஃப்ரென்ட்ஸா இருப்போமே,” என்றான் தியாகு!

  

இந்த சினிமா வசனம் எல்லாம் பேசாதீங்க... என்னால உங்களை ஃப்ரென்டா இனிமேல் நினைக்க முடியாது,” என்றாள் கிருத்திகா பட்டென்று!

  

அவள் பக்கம் மீட்னும் பார்வையை திருப்பிய தியாகு, “மனசு வச்சா எதுவும் நடக்கும் கீர்த்தி,” என்றான் மென்மையாக!

  

கிருத்திகாவிற்கு கோபம் பொங்கியது!

   

அப்படியா? எல்லாம் நடக்குமா??? அப்போ ஏன் உங்களால மனசு வச்சு உங்க மனைவியான என் கூட எல்லா ஹஸ்பன்ட் அன்ட் ஒய்ஃப் போல நார்மலா வாழ முடியலை????”

  

கோபம் கொதிக்க அவள் கேட்ட கேள்வியை கேட்டு ஆச்சர்யத்தில் அவனின் கண்கள் விரிந்து மின்னின!!!

  

அவனின் ரியாக்ஷனைப் பார்த்து என்ன ஏது என்று குழம்பிய கிருத்திகாவிற்கு, தாமதமாகவே அவளின் கேள்வி சொன்ன மறைமுக அர்த்தம் உரைத்தது!

  

அவள் என்னவோ இந்த மிஸ்டர் ஸ்டோன் ஸ்டேச்யூவிற்காக ஏங்கி ஏங்கி கரைவதுப் போல அல்லவா கேட்டுவிட்டாள்...! அதுவும் அவன் வேறொரு பெண் அவன் வாழ்வில் இருப்பதாக சொன்ன பிறகும் கூட... ச்சே...! ச்சே...! ச்சே...!

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.