அலுப்புடன் சொன்னவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் லாவண்யா. ஒரு வேளை அவன் சொல்வது போல் முதல் பக்கத்தில் இருக்கும் விபரங்கள் மட்டும் தவறாக இருந்தால், இருக்கும் வருத்தம் போதாதென்று அவனை நம்ப வைத்து ஏமாற்றியது போல் இருக்கும்... எல்லாம் தெளிவாக தெரிவது வரை அமைதியாக இருப்பதே மேல் என்று முடிவு செய்து அவள் மேலே எதுவும் பேசாமல் இருந்தாள்.
🌼🌸❀✿🌷
டாக்டர் கமலநாதன் விவேக் சொன்னதை கவனமாக கேட்டார்.
“முன்பை விட இப்போது தலைவலி வரத்து அதிகமாகி இருக்குன்னு சொல்றீங்க?”
“யெஸ் டாக்டர்... அதனால் தான் டாக்டர் தாமசை கன்சல்ட் செய்தேன்...” என விவேக் சொல்லவும், அதுவரை அமைதியாக இருந்த லாவண்யா,
“ஆனால் டாக்டர், எனக்கு என்னவோ அந்த ரிப்போர்ட்ஸ்ல ஏதோ குழப்பம் நடந்திருக்கும்னு தோணுது... திரும்பவும் ஒரு தடவை டெஸ்ட் செய்து பார்ப்போமா?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் செய்யலாம்... நீங்க உங்க டாக்டரையே கேட்டும் கன்ஃபார்ம் செய்யலாம்...” என்றார் கமலநாதன்!
“இல்லை டாக்டர் எதுக்கும் திரும்ப டெஸ்ட் செய்யலாம்...”
“ஓகே... மிஸ்டர் விவேக், உங்களுக்கு இந்த ரீசென்ட் பாஸ்ட்ல, பார்க்குறதுல, பேசுறதுல இல்லைனா கேட்குறதுல ஏதாவது பிரச்சனை இருக்கது போல இருக்கா?”
“நோ டாக்டர்... அப்படி எல்லாம் எதுவுமில்லை...”
“நடக்கும் போது ஏதாவது பிரச்சனை? இல்லன்னா திடீர் திடீர்னு மூட் மாறுவது போல் ஒரு