லக்கேஜ்களை அங்கேயே வைத்துவிட்டு வெளியே சென்றான். தனியாக விடப்பட்ட ரிஷி என்ன செய்வது என தோனாமல் அர்ஜூனுக்காக வெளியே சென்று காத்திருக்கலாம் என எண்ணி வெளியே செல்ல எத்தனித்தவன் ஏதோ தோன்ற
”நந்தினி” என அழைத்தான்
அவளும் பாத்ரூமிலிருந்தே
”என்ன அத்தான்”
”ஏதும் பிரச்சனையில்லையே”
”இல்ல அத்தான்”
”சரி நான் வெளிய வெயிட் பண்றேன் நீ குளிச்சிட்டு வந்துடு” என சொல்லிவிட்டு அறைக்கதவை சாத்திவிட்டு வெளியே சென்று சோபாவில் அமர்ந்தான்.
அரை மணி நேரம் கழித்து அர்ஜூன் வந்தான். அங்கு நந்தினி இல்லாமல் போகவே ரிஷியிடம்
”அண்ணா எங்க தங்கச்சியை காணல”
”குளிக்க போனா”
”ஓ சரி சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் 3 பேரும் சாப்பிடலாம் ஆமா நீங்க என்ன குளிக்காம இருக்கீங்க போங்க போய் குளிச்சிட்டு வாங்க”
”நந்தினி குளிக்கறாளே”
”அவள் குளிச்சா உங்களுக்கென்ன”
”அவள் என் ரூம்ல இருக்கற பாத்ரூம்ல குளிக்கறா”