செதுக்கப்பட்டிருந்தது. அதன் ஒளி தங்க நிறத்தில் விழுந்தது.
ஹாலுக்கு ஒரு புறம் டைனிங் ஹாலும் பக்கத்தில் கிச்சனும் இருந்தது. கிச்சனுக்குள் சென்றவள் பார்த்தால் பெயருக்கு அங்கே சாமான்கள் வைக்கப்பட்டிருந்தது. கிச்சனில் இருந்த சிங் கூட மீன்வடிவ தொட்டி போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. கிச்சனில் இருந்த சமையல்காரர் அவளை பார்த்ததும்
”உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தாச்சி பரிமாறட்டுமா” என கேட்க
”கிச்சன்ல சமைக்கவே மாட்டாங்களா இவ்ளோ சுத்தமா இருக்கு”
”இல்லை மேடம் இங்க யாரும் சமைக்க மாட்டாங்க சமைக்கற அவசியமே வந்தது இல்லை”
”ஏன்”
”எங்க எல்லாருக்கும் சாப்பாடு அர்ஜூன் அண்ணாவே வாங்கிட்டு வந்துடுவாரு எங்களுக்கு தேவைன்னா நாங்களே தெரு முக்குல இருக்கற ஓட்டல்ல போய் சாப்பிடுவோம்”
”இந்த வீட்ல மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க”
”ரிஷி அண்ணா அர்ஜூன் அண்ணா நான் வேலைக்காரன் ஒருத்தன் வாட்ச்மேன் அவ்ளோதான்”
”ஏன் வேற யாருமே இல்ல”
என அவள் கேட்ட கேள்விக்கு ரிஷி பதிலளித்தான்
”என் குடும்பம் வேற வீட்ல இருக்கு இது என்னோட கெஸ்ட் ஹவுஸ். தாத்தா பாட்டி அப்பா அம்மா தம்பிங்க எல்லாரும் இதை விட பெரிய பங்களால இருக்காங்க” என சொல்லவும் திரும்பி பார்த்தவள் தன்னை போன்றே அவனும் நீல வண்ணத்தில் உடையணிந்திருப்பதை கண்டு வெட்கப்பட அவனுக்கு அவளின் வெட்கம் என்னவோ போல் செய்ய கீ கொடுக்காமலே அவளிடத்தில் வந்து நின்றான்.