(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

பிடித்து விட்டது!

  

அவனும் அவனின் வியாக்கியானமும்... அதை எல்லாம் தூக்கி அடுப்பில் போட வேண்டியது தான்!

  

அவள் முன்பு நினைத்தது தான் சரி... அவன் எந்த விதமாக எடுத்து சொன்னாலும் சரி தான், அவளை மாற்ற முடியாது!!!

  

டேய் ஸ்டோன் ஸ்டேச்யூ... ஐ லவ் யூ டா... எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு... பழைய ஞாபகம் வந்தாலும் வரா விட்டாலும் நீ தான் என் ஹஸ்பன்ட்... உன்னை அப்படி எல்லாம் ஃப்ரீயா சுத்த விட்டு விட முடியாது... நான் விடவும் மாட்டேன்!

  

மனசுக்குள் பிரகடனம் செய்துக் கொண்டவளுக்கு, அவ்வப்போது அவளிடம் பேசும் போது அவளை ரசனையுடன் பார்க்கும் ராஜின் பார்வை நினைவு வந்தது!

  

சும்மா இருக்கும் போதே இப்படியா!!!! இனிமேல் தான் என்னை ஃபுல் ஃப்ளோவில் பார்க்க போற என் செல்ல ஸ்டேச்யூ...! கீர்த்தி அட்டாக் ரீ-ஸ்டார்ட்ஸ் நவ்... என்ன செய்றன்னு தான் பார்ப்போமே...!

  

தெளிவான முடிவுக்கு வந்தவளாக, நாற்காலியில் இருந்து எழுந்தவள், “ராசாவே உன்னை விட மாட்டேன்...” என்று பாடலை முணுமுணுத்தப் படி கை கழுவி விட்டு தன் அறைக்கு சென்றாள்!!!!

  

🌼🌸❀✿🌷

   

கிருத்திகா லைப்ரரியில் மும்முரமாக அவளுக்கு வேண்டிய புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தாள். கையில் இருந்த அவளின் செல் ஃபோன் வைப்ரேட் செய்யவும், அழைப்பவர் பெயரை பார்த்து விட்டு, எடுத்து மெல்லியக் குரலில் பேசினாள்.

  

ஹலோ விஜய்ண்ணா!”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.