(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

மூச்சை வெளியேற்றி!

  

உங்களுக்கு வர தலைவலி ஸ்ட்ரெஸ்ஸினால் வர தலைவலி... வேலையை மட்டுமே நினைக்காம கொஞ்சம் ரிலாக்ஸும் செய்ங்க...”

  

ஓகே டாக்டர்...”

  

மேலும் டாக்டர் கமலநாதன் அறிவுரைகளையும், தலைவலிக்காக கொடுத்த மாத்திரையையும் வாங்கி கொண்டு மருத்துவமனை கட்டிடத்தின் வெளியே வந்த விவேக்கின் மனதில் இருந்த பாரம் மொத்தமாக அகன்று விட்டதாக தோன்றியது.

  

தன் அருகே இருந்த லாவண்யாவின் கையைப் பற்றி,

  

ரொம்ப தேங்க்ஸ் லாவி... நீ மட்டும் கம்பல் செய்திருக்கலைனா, நான் இன்னும் எத்தனை நாள் இப்படி முட்டாளா இருந்திருப்பேன்னு தெரியலை...” என்றான் மெல்லிய குரலில்.

  

நீ முதலேயே பாரதியிட கிட்டேயோ, உன் ஃபேமிலில யார் கிட்டேயோ சொல்லி இருந்தா, இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்,” என்றாள் லாவண்யா ஈஸியாக!

  

இருக்கலாம்...” என்றான் விவேக் பெருமூச்சுடன்.

  

இப்போவும் கூட பாரதிக்கு தான் நீ தேங்க்ஸ் சொல்லனும் விவேக். அவங்க எப்படி உன்னை புரிஞ்சு வச்சிருக்காங்க பாரு! உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு இருக்காங்க! நீ என்ன தான் செஞ்சாலும் காரணத்தை கண்டுப்பிடிக்காமல் விட மாட்டேன்னு பிடிவாதமா, நீ சொன்னதை வச்சு என்னை தப்பா நினைச்சிருந்தாலும், என் கிட்ட நேரா வந்து பேசினாங்க பார்த்தீயா?”

  

தப்பா நினைச்சா?? பாரதி உன் கிட்ட கோபமா ஏதாவது சொன்னாளா லாவி? அவ நான் சொன்னதை தப்பா புரிஞ்சு வச்சிருக்கா... அப்படி ஏதாவது அவ பேசி இருந்தா மனசுல வச்சுக்காதே, ப்ளீஸ்...”

  

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.