(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

செய்றது எப்படின்னு சொல்றாங்க! அதுவுமில்லாமல் டாக்டர் தாமஸ் கொஞ்சம் டென்ஷன் ஆகி எல்லாத்துக்கும் பதற்றம் அடையுற டைப், மத்தப்படி ரொம்ப திறமையானவருன்னு அவரை விட்டுக் கொடுக்காமல் தான் பேசுறாங்க...”

  

டாக்டர் என்ன சொன்னார்?”

  

என்ன சொல்வார், அமைதியா இருந்தார்...”

  

சரியானவர்! அந்த விவேக்குமாருக்கு எப்படி இருக்குதுன்னு தெரியலைல...”

  

மனைவியின் கேசத்தை பரிவுடன் வருடிய விவேக்,

  

அங்கே அதே ஹாஸ்பிட்டல்ல தான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருக்கார்ன்னு சிஸ்டர் சொன்னாங்க... பாவம் சின்ன பையன்... பணம் இருக்குமான்னு தெரியலை,” என்றான்!

  

ஏன் ஆனந்த், அவரோட ட்ரீட்மென்ட்டுக்கு நாம ஹெல்ப் செய்தால் என்ன?”

  

விவேக் மனைவியை கேள்வியாகப் பார்த்தான்.

  

எல்லோருக்கும் நம்மால் உதவ முடியாது தான் ஆனந்த்... ஆனால் இப்படின்னு நினைக்கும் போதே கஷ்டமா இருக்கே... அவருக்கு, அவருடைய ஃபேமிலிக்கு எல்லாம் எப்படி இருக்கும்!”

  

நிஜம் தான் ரதி... நாம உதவி செய்யலாம்... ட்ரீட்மென்ட்டுக்கான முழு செலவையும் நாமே செய்வோம்... எனக்கு இது தோணவே இல்லை பாரு... லாவண்யா சொன்னது சரி தான்... நீ ரொம்ப ஷார்ப் ரதி!”

  

புன்னகையுடன், மேலும் கணவனுடன் நெருங்கி அமர்ந்த பாரதி,

  

ஆனந்த், நான் ஒரு விஷயம் சொன்னா கேப்பீங்களா?” என்றாள் மென்மையாக!

  

நீ சொல்லி நான் கேட்காம இருப்பேனா? சொல்லுடா!”

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.