(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அதுவா ட்ரெயின்ல வரும் போது கம்பி கிழிச்சிடுச்சாம்

  

சரி காயத்துக்கு ஏதாவது மருந்து போட்டீங்களாஎன நந்தினியிடம் கேட்க அவள் பதில் சொல்வதற்கு முன் மறுபடியும் ரிஷி பதில் தந்தான்

  

மஞ்சள் பூசிவிட்டிருக்காஎன அவன் சொல்லவும் கடுப்பானான் கௌதம்

  

டேய் நான் அவளை தானே கேட்டேன் உன்னையா கேட்டேன்

  

யாரை கேட்டா என்ன பதில் ஒண்ணுதானே

  

சரி விடு உன்கூட பேசி ஜெயிக்க முடியாது இரு நான் மருந்து போட்டு கட்டு கட்டறேன்என சொல்லி அவளுக்கு மருந்து தடவி கட்டும் போட்டுவிட்டான் கௌதம்

  

பிறகு அவளிடம்

  

ரொம்ப கை வலிக்கற மாதிரி வேலை எதுவும் செய்ய வேணாம், தண்ணீர் படாம பார்த்துக்கனும், அடிக்கடி கட்டு மாத்தவேணாம் 2 நாளைக்கு ஒரு முறை வந்து பாருங்க நானே டிரஸ்ஸிங் பண்ணிடறேன், இல்லன்னா ஏதாவது ப்ராப்ளம் வரும் ஆமா வலி ஏதாவது அதிகமா இருக்காஎன கேட்க அதற்கு ரிஷி வாயை திறக்க

  

டேய் அடிப்பட்டது அவளுக்கு வலி கூட அவளால தான் உணர முடியும், நீ பேசாத” என அவனை அதட்டிவிட்டு நந்தினியிடம்

  

”நீ சொல்லும்மா” என அவளை கேட்க

  

கொஞ்சம் சுறுக் சுறுக்குனு வலிக்குது

  

சரி நான் வலிக்கு மாத்திரை தரேன் ஊசி போடட்டும்மாஎன கேட்க ரிஷியே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.