(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

ஹாய் வெண்ணிலா எப்படியிருக்க

  

நான் இருக்கறது முக்கியமில்லை இவள் யார் அதான் முக்கியம்

  

எதுக்கு கோபப்படற பொறுமையா கேளு இவள் பேரு நந்தினி

  

சே பேர பாரு நல்லாவேயில்லைஎன அவள் சொல்லவும் நந்தினி முகம் வாடிவிட்டது

  

அதைபார்த்த இரு ஆண்களும் வெண்ணிலாவிடம்

  

போதும் நிறுத்து வெண்ணிலாஎன ரிஷி கத்த

  

தேவையில்லாம அடுத்தவங்களை இன்சல்ட் பண்ணாத, பேருக்கென்ன குறைச்சல் அவளுக்கு ஏத்த மாதிரி அழகாதான் இருக்குஎன கௌதம் பேச ரிஷி கௌதமை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு நந்தினியின் கையை பற்றி இழுத்துக்கொண்டு காருக்கு சென்று காருக்குள் அவளை அமர வைத்துவிட்டு தானும் டிரைவர் இருக்கையில் அமர்ந்து அதை வேகமாக ஓட்டலானான்.

  

  

அவன் எதுவும் பேசாததால் அவளும் எதுவும் பேசாமலே வந்தாள். வீட்டை அடைந்ததும் உள்ளே வந்தவர்கள் அர்ஜூன் இருப்பதை பார்த்து என்ன என்பது போல் சைகை செய்தான் ரிஷி

  

என்னவா ராஜகோபால் யார்னு கண்டுபிடிச்சிட்டேன்என சொல்லிய அர்ஜூன் அவளிடம்

  

சரி கிளம்பு உன்னை கொண்டு போய் உன் மாமா வீட்ல விட்டுடறேன்

  

இரு இப்ப மணி என்னஎன்றான் ரிஷி

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.