(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

முடிஞ்சிடுச்சி ஏதோ எங்கம்மா உன்னை பார்த்துக்கிட்டாங்க, அதுக்காக நானும் உன்னை பார்த்துக்கனும்னு எந்த அவசியமும் இல்லை புரியுதாஎன எரிந்துவிழவும் அவளுக்கு அழுகை வந்தது. அவள் அழுவதை பார்த்த அர்ஜூன் அவரிடம்

  

அதுக்கு எதுக்கு லெட்டர் போட்டீங்க எதுக்கு எங்க அட்ரஸ் எழுதினீங்கஎன கேட்க

  

லெட்டர் போடலன்னா ஊருக்குள்ள மானம் போயிடும்னுதான் போட்டேன், அப்படியே இவள் இந்த ஊருக்கு வந்தாலும் அட்ரஸ் தேடி தொலையட்டுமேன்னு தான் அப்படி செய்தேன்என வெறுப்பாக கூறவும் அவளால் தாங்க முடியவில்லை அவளின் அழுகை அதிகமானது

  

யோவ் என்னய்யா நீ பாட்டுக்கு கதை விடற பாவம் யாருமில்லாத பொண்ணு வீட்டுக்குள்ள சேர்த்துக்க

  

நீ யார் அதை சொல்றதுக்கு, வெளியே போ, நீ சொல்றத கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை கிளம்பு, இதை பாரு நந்தினி என்னால உன்னை பார்த்துக்க முடியாது, உன்னால இந்த ஊர்ல வாழ முடிஞ்சா வாழு இல்லன்னா கடல்ல விழுந்து சாவுஎன ராஜகோபால் கூறவும் நந்தினி அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடினாள். அவள் ஓடுவதை பார்த்த அர்ஜூன் அவரிடம்

  

யோவ் நீயெல்லாம் பெரிய மனுசனாயா, அவள் தங்கியிருந்த வீட்டை கூட வித்துப்புட்டு ஒரு வயசுக்கு வந்த பொண்ணை இப்படி வெளிய துரத்தறியே நீயெல்லாம் உருப்படவே மாட்டஎன சாபம் விட்டபடி லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

  

வெளியே ஓடிவந்தவள் நேராக கேட்டை தாண்டவும் ரெடியாக நின்று கொண்டிருந்த ரிஷி அவளை பிடித்துக்கொண்டான், அவளும் தன்னை ரிஷி பிடிப்பதை பார்த்து அழுதுகொண்டே அவன் நெஞ்சில் ஆதரவாக சாய்ந்துக் கொண்டாள்.

  

அவளின் அழுகை அவனின் கோபத்தை அதிகரிக்க செய்தது, வெளியே வந்த அர்ஜூனும் ரிஷி கேட்டுக்கு வெளியே .இருப்பதை கண்டு வேகமாக சென்று உள்ளே நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற அவனுக்கு கோபமே வந்தது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.