”இல்ல நான் பார்க்கல” என அவன் சொல்லும் போதே அவன் 4 கால் பாய்ச்சலில் வேகமாக அவள் ரூமை அடைந்தான், அங்கு நந்தினி அமைதியாக உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு வேகமாக வெளியே ஹாலுக்கு வந்து சோபாவில் சோர்ந்து போய் அமர்ந்தான். அவனின் செயலை கண்ட அர்ஜூன் அவனிடம்
”அண்ணா என்னாச்சி”
”ஒண்ணுமில்லை அந்தாளு நேத்து திட்டினதை வைச்சி அவள் எந்த தப்பான முடிவுக்கும் போய்ட்டாளோன்னு பயந்துட்டேன் நைட்டெல்லாம் எனக்கு தூக்கமே வரலடா”
”அண்ணா இது சரியில்ல என்ன நடக்குது உங்களுக்குள்ள”
”என்ன நடக்குது எதுவுமேயில்லையே”
”அண்ணா நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன் உங்க போக்கே சரியில்லை”
”என்ன சரியில்லை”
”நந்தினியை லவ் பண்றீங்களா”
”அப்படியெல்லாம் இல்லை”
”அப்புறம் எதுக்கு அவள் அத்தான்னு கூப்பிடலன்னு மட்டும் நேத்து கோவிச்சிக்கிட்டீங்க”
”ம் அது வந்து” என தயங்க
”ம் சொல்லுங்கண்ணா அது என்ன சொல்லுங்க”
”தெரியல”