(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

ரிஷி யாரோ ஒரு பொண்ணு முன்னாடி என்னை அவமானப்படுத்தாத

  

யாரோ ஒரு பொண்ணா அவள் நந்தினி

  

அதான் அவள் யாரு உங்களுக்கு அவள் என்ன உறவு சொல்லுங்க

  

அந்த கேள்விக்குதான் யாரிடமும் பதிலில்லை சிறிது நேரம் மௌத்திற்கு பின் நந்தினியே பேசினாள்

  

மன்னிச்சிடுங்க நான் இங்க வந்தது எதுக்குன்னாஎன அவள் பேசி முடிக்கும் முன்பே ரிஷி குறுக்கிட்டான்

  

நந்தினி  கண்டவங்ககிட்ட பதில் சொல்லனும்னு ஒண்ணும் அவசியமில்லை நீ உன் ரூமுக்கு போஎன அவன் கத்தவும் அவளும் அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள். வெண்ணிலாவிற்கோ அவமானமாகிவிட்டது

  

என்ன ரிஷி என்னை பார்த்து கண்டவங்கன்னு சொல்றீங்கஎன கேட்கவும்

  

எங்க அண்ணனுக்கு பொய் சொல்ல வராதுஎன்றான் அர்ஜூன் அவனை முறைத்துவிட்டு ரிஷியிடம்

  

ரிஷி இன்னிக்கு நீங்க என்னை அவமானப்படுத்திட்டீங்க இதுக்கு நான் உங்களை என்ன செய்றேன்னு பாருங்கஎன  கோபமாக கத்திவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

  

அவள் சென்றதும் அர்ஜூன் ரிஷியிடம்

  

அண்ணா எனக்கு என்னவோ இந்த ரெண்டு பொண்ணுங்களால உங்க வாழ்க்கையில சுனாமி வரும்னு தோணுது

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.