”அப்ப நந்தினி”
”நந்தினியா அவள் எதுக்கு”
”அப்ப அவள் தனியாதானே இருக்கனும்”
”இருக்கட்டும் வீட்லதானே இருக்கா பத்திரமா இருப்பா”
”எப்படி நம்பறது திடீர்னு அவள் மாமா சொன்னதை யோசிச்சி ஏதாவது பண்ணிக்கிட்டா”
”அதுக்கும் வாய்ப்பிருக்குது ஆனா அதுக்காக நம்ம தொழிலை விடமுடியுமா ஒரு நாள் லேட்டானா பல லட்சம் நஷ்டமாயிடும்ணா”
”சரி அப்ப அவளையும் கூட்டிட்டுப் போலாம்”
”என்னது அவளையா அண்ணா புத்திகித்தி கெட்டு போச்சா உங்களுக்கு”
”அப்ப அவள் தனியா இருந்து நமக்கு தெரியாம தற்கொலை செஞ்சிக்கிட்டா இல்லை இங்கிருந்து எங்கயாவது போயி யார்கிட்டயாவது மாட்டி கஷ்டப்பட்டா பரவாயில்லையா சொல்லு” என்றான் ரிஷி கோபமாக
”சரிண்ணா விடுங்க நீங்க சொல்ற மாதிரியே செய்யலாம்னு வைங்க ஆனா அதுக்கு நந்தினி ஒத்துக்கனுமே”
”ஏன் அவள் ஒத்துக்க மாட்டாளா”
”அண்ணா அவளைப் பார்த்தா குடும்ப பொண்ணு மாதிரியிருக்கு, நீங்க வெண்ணிலாவை பார்த்துட்டு அவளை மாதிரி இவளும் இருக்கனும்னு எதிர்பார்க்கறது தப்பு அண்ணா”