(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அர்ஜூன் அவளை மேல்மாடியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று அவளது உடைமைகளை அங்கே வைத்துவிட்டு அவளை தூங்க சொல்லிவிட்டு அர்ஜூன் அவனுடைய அறைக்கு சென்றுவிட்டான்.

  

அவளும் கதவை தாப்பாள் போட்டுவிட்டு அங்கிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டாள், அவளுக்கு தான் அநாதையாகிவிட்டோமே என நினைத்து தூக்கமே வரவில்லை. அவளுக்கு மட்டுமல்ல ரிஷிக்கும் தான் தன்னை வேறொருவனாக பார்த்துவிட்டாளே என்ற கவலையில் தூக்கம் வரவில்லை தன் அண்ணன் மனம் மாறியதை கண்ட அர்ஜூனிற்கும் உறக்கம் வரவில்லை. அன்றைய இரவு 3 பேருமே உறங்காமல் பலமாக யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

  

  

நந்தினிக்கோ மேற்கொண்டு என்ன செய்வது எங்கே செல்வது என தெரியாமல் பலவிதமாக யோசித்தாள், ரிஷிக்கோ அது எப்படி தன்னை யாரோவாக பார்த்துவிட்டாளே அத்தான் என்றவள் சட்டென மாறிவிட்டாளே என யோசித்தான்.

  

அர்ஜூனிற்கோ அண்ணன் மனதில் நந்தினி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது, இனிமேல் அண்ணன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என தெரியவில்லையே என குழம்பி போனான். உறக்கம் வர விடியல் ஆனது. 3 பேருமே காலையில் லேட்டாகவே எழுந்தார்கள்.

  

விடிந்ததும் காலையில் தன் அறையிலிருந்து வெளியே அரக்க பரக்க வந்தான் ரிஷி, அவனின் இந்த செய்கையை கண்ட அர்ஜூனிற்கு ஒன்றுமே புரியவில்லை

  

அண்ணா என்னாச்சி ஏன் ஓடறீங்க

  

நந்தினி எங்க

  

அவள் கெஸ்ட்ரூம்ல இருப்பா

  

நீ பார்த்தியா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.