”எங்கயாவது ஹாஸ்டல்ல சேர்த்திடுங்க அத்தான், இதே ஊர்ல ஏதாவது வேலை தேடிக்கிறேன்” என அவள் சொன்னதும் அவனுக்கு கோபம் வர அவன் ஏதாவது திட்டுவதற்குள் சரிசெய்து விடவேண்டுமென என எண்ணிய அர்ஜூன் அவளிடம்
”அம்மாடி நீ சொன்ன மாதிரியே ஹாஸ்டல்ல சேர்த்துடறேன், உனக்கு வேலைதானே வேணும் எங்க ஆபீஸ்ல வேலையிருக்கு செய்றியா”
”அவள் எதுக்கு வேலைக்கு போகனும் அவளுக்கு என்ன தலைவிதி, என் வீட்டு பொம்பளைங்க யாரும் வேலைக்கு போகனும்னு அவசியமில்லை” என ரிஷி கூறவும் அவள் புரியாமல் இருவரையும் பார்க்க
அர்ஜூனே சமாளித்தான்
”இல்ல நந்தினி நீ வெளியே வேலைக்கு போனா நீ யார்னு விசாரிப்பாங்க, யார் உன்னை கூட்டிட்டு வந்தாங்கன்னு கேட்பாங்க நீயும் அண்ணா பேரை சொல்லுவ, அதனால அவருக்கு மானம் போயிடும்ல அதை சொல்றாரு சரியாண்ணா” என கூறவும் அவனை முறைத்தான் ரிஷி
”என்னால அத்தான் பேருக்கு எந்த களங்கமும் வராது, நான் யார்கிட்டயும் அவரைப்பத்தி சொல்லமாட்டேன்”
”அதுக்கு ஒண்ணும் அவசியமில்லை இனிமே நீ என் கூடவே இரு போதும்” என்றான் ரிஷி
”எதுக்கு அத்தான்”
”உன்னை நம்ப முடியாது திடீர்னு மனசு மாறி நீ தற்கொலை பண்ணிக்கலாம், இல்ல எங்கயாவது ஓடி போய் யார்கிட்டயாவது மாட்டிக்கலாம்”
அவள் மறுபடியும் அர்ஜூனை குழப்பமாக பார்க்க அவனுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது