(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

உதவி பண்றேன் புரியுதா

  

புரியுது அத்தான்என அவள் சொல்ல திருப்தியாகி அர்ஜூனிடம்

  

அர்ஜூன் நான் இப்ப மீட்டிங் போறேன் நீ வரவேணாம், அங்க கருணா இருப்பான் அவனை வைச்சி நான் பார்த்துக்கிறேன், நீ என்ன செய்ற நந்தினிக்கு ஒரு நல்ல ஹாஸ்டலா பார்த்து சேர்த்துவிடு, எந்த பிரச்சனையும் வரக்கூடாது, சௌகர்யமான ஹாஸ்டலா பாரு.

  

 அப்படியே அவளுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடு, நானும் மீட்டிங் முடிச்சிட்டு என் ப்ரெண்ட்கிட்ட சொல்லி வேலை வாங்கி அவளுக்கு கொடுத்துடறேன், ஹாஸ்டலுக்கு தேவையான பணத்தை கட்டிடு, அப்படியே செலவுக்கு கொஞ்சம் பணத்தையும் கொடுத்துடு புரியுதா

  

நல்லாவே புரியுதுண்ணா நீங்க சொல்லித்தான் நான் இதை செய்யனுமா என்ன என் தங்கச்சியை நான் பத்திரமா பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்கண்ணாஎன சொல்ல ரிஷியும் நந்தினியை பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் கிளம்பி சென்றான்.

  

அவன் சென்றபின் தான் அர்ஜூனுக்கு மூச்சே வந்தது

  

”மனசுல என்னதான் நினைக்கிறாரோ ஒண்ணு லவ்வுன்னு சொல்லனும் இல்லைன்னு சொல்லனும் ரெண்டுகெட்டானா யோசிக்கறாரு, பாவம் நந்தினி அவளுக்கு ஒண்ணுமே புரியலை எப்படியாவது இங்கிருந்து போகனும்னு நினைக்கிறா, அதனால அண்ணா செய்றதை பொறுத்துட்டு போறா, இவள் மனசுல என்ன இருக்கோ தெரியலை ஆனா அண்ணா மனசுல இவள் இருக்கா அது நல்லாவே தெரியுது, இது எங்க போய் முடியப்போகுதோஎன மனதுக்குள் நினைத்துக்கொண்டே நந்தினியின் லக்கேஜ்களை பேக் செய்தவன் அவளை அழைத்துக்கொண்டு நல்ல தரமான ஒர்க்கிங் வுமன் ஹாஸ்டலை அடைந்தான் அர்ஜூன்.

  

அங்கிருந்த வார்டனிடம் அர்ஜூன் தனது வேலைக்கான ஐடி மற்றும் தான் இருக்கும் இடம் பற்றி எழுதி தந்துவிட்டு அவரிடம்

  

மேடம் இவள் என் தங்கச்சி, படிச்சி முடிச்சிட்டா இங்க ஒரு வேலைக்காக வந்திருக்கா.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.