(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அவள் எங்கயாவது போனா நானும் போயிடுவேன் அப்படி ஒரு மாப்பிள்ளையா பார்க்கறேன்

  

ஆமாம்பா நேரத்தோட மாப்பிள்ளையை தேடு, வயசு பொண்ணு அதுவும் அழகாயிருக்கா, என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னு பயப்படறத விட காலா காலத்துல கல்யாணம் பேசி முடிச்சிட்டா நிம்மதியாயிடும்

  

நானும் அதைத்தான் யோசிச்சேன், கைவசம் ரெடியா ஒரு மாப்பிள்ளை இருக்காரு, ஆனா முரண்டு பிடிக்கறாரு அவர் சரின்னு சொல்லிட்டா போதும், சீக்கிரமாவே இவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருவேன்

  

அப்படியே நீங்களும் நேரத்துக்கு கல்யாணம் பண்ணிக்குங்க

  

முதல்ல தங்கச்சி கல்யாணம் ஆகட்டும் நான் பொறுமையா செஞ்சிக்கறேன், சரிங்க மேடம் நான் கிளம்பறேன், அப்புறம் அவளுக்கு செல்போன் வாங்கப்போறேன், விசிட்டிங் வர் எப்பன்னு சொன்னீங்கன்னா அப்ப வந்து கொடுத்துடுவேன்

  

சாயங்காலம் 7 மணியிலிருந்து 8 மணி வரைக்கும்தான் விசிட்டிங் வர். அப்ப வந்து கொடுத்துடுங்க போதும்

  

சரிங்க மேடம் ரொம்ப நன்றி, அவளை பத்திரமா பார்த்துக்குங்க மேடம்என சொல்லிவிட்டு நந்தினியை பார்த்து தலையாட்டிவிட்டு வெளியே சென்றான் அர்ஜூன் அவன் சென்றதும் வார்டன் நந்தினியிடம்

  

உன் அண்ணன் உன் மேல ரொம்ப பாசமா இருக்கான் இப்படி ஒருத்தனை நான் பார்த்ததில்லை, நீ கொடுத்து வைச்சவ, மனம் போல வாழாம உன் அண்ணன் பேச்சை கேட்டு வாழப்பாரும்மா, உனக்கு ஏதாவது வேணும்னாலோ இல்லை ஏதாவது பிரச்சனைன்னாலோ வந்து என்கிட்ட தாராளமா சொல்லலாம், நீ பாட்டுக்கு உன் அண்ணன்கிட்ட சொல்லிடாத சரியா

  

சரிங்க மேடம்என சொல்லிவிட்டு அந்த பெண் ஊழியருடன் தனக்காக ஒதுக்கிய அறைக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.