“எதுக்கா டேய் என்ன உளர்றியா”
“நான் உளறலை தெளிவாதான் இருக்கேன் இன்னும் சொல்லனும்னா ஒரு தங்கச்சிக்கு அண்ணனா யோசிக்கறேன்”
“என்னத்த இப்படியா யோசிப்ப சரி சொல்லு எந்த ஹாஸ்டல்”
“எதுக்கு கேட்கறீங்க”
“தெரிஞ்சிக்கத்தான்”
“என் தங்கச்சி எங்க இருந்தா உங்களுக்கென்ன அண்ணா”
“டேய் நான் யார்ன்னு தெரியாம பேசறியா” என கோபமா கத்த
”தெரியுமே இருந்தாலும் அவள் என் தங்கச்சி என் பாதுகாப்புல இருக்கா நான்தானே அவளை பத்திரமா பார்த்துக்கனும்”
“நானும் அவளை பத்திரமா பார்த்துக்கனும்னு தான் கேட்கறேன்”
“நீங்க ஏன் என் தங்கச்சியை பத்திரமா பார்த்துக்கனும் புரியலையே”
“என்னடா புரியலைங்கற விளையாடறியா”
“இல்லைண்ணா புரிஞ்சிக்கத்தான் கேட்கறேன் சரி சொல்லுங்க நீங்க அவளுக்கு யாரு, அவளை ஏன் நீங்க பத்திரமா பார்த்துக்கனும் அவளோட அண்ணன் நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கறேன்”
”என்னடா திடீர்ன்னு புதுசா அண்ணன்னு சொந்தம் கொண்டாடிக்கிட்டு வர்ற”