நன்றாக சென்றுக்கொண்டிருந்த மீட்டிங்கை கெடுத்து பாதியிலேயே முடிக்க வைத்துவிட்டான் ரிஷி.
என்றுமே தன் அண்ணன் இப்படி நடந்துக்கொண்டதே இல்லையே என யோசித்த கருணா உடனே தன் பெரியப்பாவுக்கு போன் செய்து விவரம் கூற அவரும் தன் போனிலிருந்தே ரிஷிக்கு போன் செய்தார்
”ஹலோ”
“நான்தான் பேசறேன் என்னடா ஆச்சி உனக்கு அங்கிருந்தவங்களோட சண்டை போட்டியாமே என்ன நடக்குது அங்க”
“அது ஒண்ணுமில்லைப்பா இந்த மீட்டிங் சரியில்லை அதான்”
“நல்லா போயிக்கிட்டிருந்த மீட்டிங்கை நீயே கெடுத்துட்டு வசனமாடா பேசற”
“அப்பா இப்ப என்ன வேணும் உங்களுக்கு”
“மீட்டிங்கை ஏன்டா கெடுத்த”
“அப்ப உங்களுக்கு மீட்டிங்தான் பெரிசா போச்சா, என்னைப்பத்தி கவலையில்லை சரி நான் போன் வைச்சிடறேன்” என சொல்லி போனை வைக்கவும் அவனது தந்தை மோகனசுந்தரத்திற்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவர் உடனே கருணாவுக்கு போன் செய்து
”ஹலோ பெரியப்பா” என்றான் கருணாகரன்
டேய் என்னடா ஆச்சி அங்க ஏன் ரிஷி ஒரு மாதிரியா பேசறான்”
“தெரியலை பெரியபப்பா வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்காரு.”
“சரி அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வா வீட்ல வைச்சி பேசலாம் என்னாச்சி அவனுக்கு”