Page 17 of 25
”என்ன அண்ணா இங்க எப்படி” என உளற
“உன் பின்னாடிதானே வந்தேன் ஆமா என்ன செய்ற நீ”
“தங்கச்சிக்காக போன் வாங்கறேன்” என சொல்ல பக்கத்தில் இருந்த கருணா ஆச்சர்யப்பட்டான்
”தங்கச்சியா ஆனா உனக்கு தங்கச்சி இல்லையே”
“சொந்த தங்கச்சி இல்லை சொந்தத்தில தங்கச்சி”
“ஓ அப்படியா எங்க இருக்கா”
“ஹாஸ்டல்ல”
“எப்படியிருக்கா”
“நல்லாதான் இருக்கா”
“அது இல்லை பார்க்க எப்படியிருப்பாள்னு கேட்டேன்”
“தேவதை மாதிரியிருப்பா” என சொல்லவும் கருணா சிரித்தான். அவனின் சிரிப்பைக்கண்டு வெறுப்பானான் ரிஷி
”டேய் என்னடா இப்படி பேசற ஒரு பொண்ணை பத்தி இப்படியா பேசுவீங்க” என கருணாவை பார்த்து ரிஷி கத்த
”இல்லைண்ணா சும்மா கேட்டேன் அவ்ளோதான்” என சொல்லவும்
”சரி சரி நீ கிளம்பு நான் அர்ஜூன் கூட வரேன்”