(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

ஏன் நான் பேசக்கூடாதா

  

காலையிலதானே பேசினீங்க அதுக்குள்ள என்னவாயிடப்போறா

  

அதெல்லாம் முடியாது அவளுக்கு போன் போட்டு கொடு நான் பேசனும்என ரிஷி கேட்கவும் கருணாவிற்கு ஆச்சர்யமாக வந்தது

  

அண்ணா நீங்க ஏன் அந்த பொண்ணுக்கிட்ட பேசனும்என கருணா சந்தேகமாக கேட்க அவனை ஒரு மார்க்கமாக பார்த்தான். தேள் கொட்டின திருடன் போல திருதிருவென விழித்த ரிஷியைப்பார்த்த அர்ஜூனுக்கு சிரிப்பே வந்தது.

  

அதைப்பார்த்த ரிஷி கோபத்துடன்

  

கருணா வா வீட்டுக்குப் போலாம் கார்ல ஏறு முதல்லஎன அவனை விரட்டவும் அவனும் காரில் ஏறிக்கொண்டான்.

  

அடுத்து அர்ஜூனிடம்

  

வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வா புரியுதா எங்கயாவது சுத்திக்கிட்டு இருந்த காலை உடைச்சிடுவேன்

  

அய்யோ இனிமே எப்படி நான் அனாமத்தா சுத்துவேன், தங்கச்சி வேற இருக்கா அவளை வேற பார்த்துக்கனும் எனக்கு நிறைய வேலைகள் இருக்குண்ணா நான் கிளம்பறேன்என சொல்லிவிட்டு அவன் வேறு பக்கம் சென்றுவிட எதையோ யோசித்துக்கொண்டே காரில் ஏறினான் ரிஷி.

  

கருணாவும் காரை வீட்டை நோக்கி ஓட்டிச்சென்றான், வீடு வந்ததும் அமைதியாக வீட்டுக்குள் நுழைந்த ரிஷியை ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த அவனுடைய தாத்தாவும் அப்பாவும் சந்தேகமாக பார்த்தனர். அதில் தாத்தா ரிஷியை அழைத்தார்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.