”அய்யோ வேணாம் உன் ஊருல ஒரு பொண்ணை எடுத்தே நான் ரொம்ப கஷ்டப்படறேன் என் பேரானாவது நிம்மதியா இருக்கட்டும்” என சொல்ல ரிஷியின் தாய் பவித்ரா அவரிடம்
”என்ன மாமா இப்படி சொல்றீங்க நானும் சரி உங்க ரெண்டாவது மருமகள் சுசித்ராவும் சரி அத்தை ஊர் கிடையாதே” என அவர் வெளிப்படையாக கேட்க அதற்கு தாத்தா
”நான் சொன்ன பொண்ணே உன் அத்தைதானே, அவளை கட்டிக்கிட்டு நான் படற கஷ்டம் போதாதா, இதுல என் பேரனும் கஷ்டப்படனுமா முடியாதும்மா” என சொல்ல பாட்டிக்கு கோபம் வந்து
”அப்படி நான் என்னத்த கஷ்டம் கொடுத்துட்டேன் உங்களுக்கு சொல்லுங்க” என வம்படியாக பேச
”பாரு பாரு இப்படி புருஷன்கிட்டயே நீ எதிர்த்து பேசற சண்டை பிடிக்கற இத்தனை வருஷம் நான் கஷ்டப்பட்டுட்டேன் அதான் சொன்னேன்”
“அதெல்லாம் முடியாது நான் இப்பவே ஊருக்கு போய் ரிஷிக்காக ஒரு பொண்ணை பார்க்கப்போறேன் யார் குறுக்க வராங்கன்னு நானும் பார்க்கறேன்” என சொல்லிவிட்டு அவர் வீராவேசமாக உள்ளே சென்றார். அதைப்பார்த்த தாத்தா
”அய்யோ பாவம் ரிஷி இப்பதான் சரின்னு சொன்னான் இதுல இவள் வேற அவளை மாதிரியே ஒருத்தியை கூட்டிட்டு வந்தா அவன் என்ன ஆவான், சந்நியாசி ஆயிடப்போறான்” என சொல்லி வருத்தப்படவும் பவித்ரா உடனே தாத்தாவிடம்
”இல்லை மாமா அப்படியாக விடமாட்டேன், இத்தனை வருஷம்தான் அத்தை கிட்ட திட்டு வாங்கி முடிச்சேன். இனி அவரை மாதிரியே மருமகள் வந்தா நான் தாங்கமாட்டேன். என் சொந்தத்திலேயே என்னை போலவே அடக்கமான பொண்ணு இருக்கா அவளை நான் பார்க்கறேன் மாமா என் பையன் என் பேச்சை மீறமாட்டான்” என சொல்லவும் தாத்தா