(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

ஆமா அதுக்காக பொண்ணு தேடுங்கன்னு வெளிப்படையாச் சொன்னா அலையறான் பாருன்னு நினைக்கமாட்டீங்களா, அதோட அவரை கேட்டுத்தான் நீங்க எல்லாம் செஞ்சீங்களா, அவரை வளர்த்து ஆளாக்கி படிக்க வைச்சின்னு எல்லாமே நீங்க முடிவு பண்ணிட்டு கல்யாணம்னு வரும் போது மட்டும் அண்ணாவை தொல்லை பண்ணலாமா, அதையும் நீங்களே செஞ்சுட வேண்டியதுதானே, அண்ணா என்ன உங்க பேச்சை மறுக்கவா போறாரு

  

அப்படியா சொல்ற நான் இந்த கோணத்தில யோசிக்கலைடா

  

அதான் நான் இப்ப சொல்லிட்டேன்ல, நேரத்தோட அண்ணாவுக்கு கல்யாணம் பேசி முடிங்க என்னாலயும் அவர்கிட்ட திட்டு வாங்க முடியலை

  

சரி சரி இதைப்பத்தி நான் என் அப்பாகிட்ட பேசறேன் அவர் பேசினா ரிஷியும் தன் மனசுல என்ன இருக்குன்னு சொல்வான்

  

அண்ணன் மனசுல இப்போதைக்கு ஒரு பொண்ணு இருந்தா நல்லாயிருக்கும்னு யோசிக்கறாரு

  

அப்படியா நீ சொல்றது உண்மையா அப்ப நான் தைரியமா பொண்ணு பார்க்கலாம்ங்கறியா

  

பாருங்க சீக்கிரமா கல்யாணத்தை முடிங்க

  

சரி சரி நான் போன் வைச்சிடறேன்என சொல்லிவிட்டு போனை வைக்கவும் அர்ஜூனுக்கு குதூகலமாக இருந்தது.

  

அண்ணா மாட்டினீங்களா இனி பார்க்கலாம் உங்களால என்ன செய்ய முடியும்னு எப்படியிருந்தாலும் உங்க மனசுல இருக்கறத நீங்க சொல்லித்தானே ஆகனும். என் தங்கச்சிக்கு ஊர் உலகம் முழுக்க தேடினா கூட இப்படி ஒருத்தன் கிடைக்கமாட்டான். இதுக்காகவாவது உங்களை தொல்லை பண்ணி என் தங்கச்சியை உங்க கையில புடிச்சித் தரேன்என நினைத்துக்கொண்டே அழகான செல்போனும் சிம்மும் வாங்கிக்கொண்டு வெளியில் வர ரெடியாக இருந்தான் ரிஷி. அதைப்பார்த்து பயந்துக்கொண்டே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.