அப்பாவும் வியந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். அதில் அப்பா அவனிடம்
”என்னடா இது ஆச்சர்யமா இருக்கே எப்ப கேட்டாலும் முடியாது வேணாம்னு சொல்லி ஓடுவ இப்ப என்னாச்சி”
என அவர் கேட்க ரிஷிக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் நெளிந்தான் அந்நேரம் கருணா வரவும் சட்டென தன் தந்தையிடம்
”அது அப்பா வந்து நம்ம கருணா வேற இருக்கான் பாவம், அவன் கல்யாணம் செஞ்சிக்கனும்ல நான் வேற குறுக்கே இருக்கேன் அதான் இப்ப சரின்னு சொன்னேன்” என சொல்லி முடிக்கவும் தாத்தாவிற்கு சிரிப்பே வந்து கலகலவென சிரித்துவிட்டார். அவரின் சிரிப்பை தொடர்ந்து கருணாவும் சிரித்துக்கொண்டு
”அண்ணாக்கு கல்யாண ஆசை வந்துடுச்சி, நேரா சொல்ல வெட்கப்பட்டு என்னை வைச்சி ஜாடை மாடையா பேசறாரு” என சத்தமாக சொல்லவும் வீட்டிலிருந்த பெண்கள் வெளியே வந்தனர். அவர்களைப் பார்த்த ரிஷி சட்டென எழுந்து தன் அறைக்கு வேகமாக சென்று கதவை சாத்திவிட்டான். அவன் சென்றதும் மோகனசுந்தரம் தன் தந்தையிடம்
”எப்படியோப்பா ஒரு வழியா ரிஷி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டான். இனி பொண்ணு தான் தேடனும் அதுக்கு நான் ஏற்பாடு செய்றேன்”
”நீயா ஏன் நீ யாரையாவது பார்த்து வைச்சிருக்கியா” என தாத்தா கேட்க அதற்கு
”ஆமாம்பா என் ப்ரெண்ட் பொண்ணை பார்த்துவைச்சேன் என்னிக்கு ரிஷி சரின்னு சொல்றானோ அன்னிக்கு அவளை கூட்டிட்டு வரலாம்னு நினைச்சேன்பா”
“சந்தோஷம்” என தாத்தா சொல்ல உடனே பாட்டி உள்புகுந்தார்
”அது எப்படி என் பேரனுக்கு என் ஊரு பொண்ணைத்தான் நான் கட்டிக்கொடுக்கனும்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன்” என்றார் அதைக்கேட்டு பயந்த தாத்தா