புன்னகையை கொடுத்து விட்டு, உமாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“நாங்க வந்தது இருக்கட்டும் விவேக், நீ இங்கே என்ன செய்ற? நீ இன்னைக்கு ஃபுல் டே பிஸின்னு கேள்வி பட்டேன்?” என்றாள் கற்பகம்!
“பிஸி தான் அம்மா... பர்சனல் வேலையில் பிஸி,” என்றான் விவேக் ஈஸியாக!
அவனின் முகத்தில் இருந்த மலர்ச்சி மனதிற்கு நிறைவை தர, “அது சரி,” என்றாள் கற்பகம் புன்னகை மின்ன!
“நான் சொல்லிட்டே இருந்தேங்க, இவர் ஒரு வாரத்துக்குள்ளே பாரதியை பார்க்க வருவார்னு... ஆனாலும் இப்படி ஒரே நாள்ல வருவார்னு நானும் எதிர்பார்க்கலை...” என்று கமலாவும் அவர்களின் பேச்சில் கலந்துக் கொண்டாள்.
விவேக்கும் பாரதியும் தங்களுக்குள் கண்கள் மின்ன ஒரு பார்வையை பரிமாறிக் கொள்ள,
“அவன் இப்படி தான், ஒரு நாள் விழுந்து விழுந்து செல்லம் கொஞ்சுவான், ஒரு நாள் விஷயமே இல்லாமல் கோபப்படுவான்,” என்றாள் கற்பகம்!
“போதும் அம்மா, இந்த விவேக்கோட புராணம்! என்ன ஸ்பெஷல், பாரதியை பார்க்க தேடி வந்திருக்கீங்க?” என பேச்சை மாற்றினான் விவேக்.
“ஏன், என் மருமகளை பார்க்க நான் வர கூடாதா, என்ன பாரதி?”
“உங்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கு அத்தை... நீங்க எப்போ வேணா வரலாம்,” என்று பாரதியும் கற்பகத்திற்கு ஒத்து ஊதினாள்!
விவேக் அவர்களை ஆச்சர்யமாக பார்க்க,
“விவேக், இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பா... மாமியார் மருமகள் உறவில் நிரந்தர நட்பும்