“இதோ வரேன் பவி...”
ஃபோனை கீழே வைத்து விட்டு, அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த விவேக்கிடம்,
“அத்தை மாமா வந்திருக்காங்க...” என்றாள் பாரதி.
“அம்மா, அப்பாவா? ஹ்ம்ம்... என்ன???”
“தெரியலை விவேக்! என்னை பார்க்க வந்தேன்னு சொன்னாங்களாம், வாங்க போகலாம்...”
“ரதி...”
“ப்ளீஸ் ஆனந்த்... என் செல்லம்ல?”
“சரி... ஆனால் ஏழு மணி வரைக்கும் தான் உனக்கு டைம்... அதுக்கு மேல எல்லாமே என் டைம், ஓகே’வா???”
“ஏழு மணியா? முதல்ல அவங்க எதுக்கு வந்திருக்காங்கன்னு கேட்கலாம்... அதுக்கு அப்புறம் இதெல்லாம் பார்ப்போம், இப்போ வாங்க...”
விவேக் தொடர்ந்து மறுத்து கொண்டிருக்கவில்லை! மனைவியின் பேச்சை தட்ட விரும்பாதவனாக அவளுடனே அறையில் இருந்து வந்தான்
விவேக்கையும் பாரதியையும் ஒன்றாக பார்த்ததும் லிவிங் ரூமில் இருந்த எல்லோரின் முகத்திலுமே மகிழ்ச்சி தோன்றியது!
“என்ன அம்மா, இப்படி சர்ப்ரைஸ் விஜயம்?” என்று இலகுவாக கேட்டப் படி கற்பகத்தின் அருகில் சென்று அமர்ந்தான் விவேக்.
பாரதியும் வந்திருந்தவர்களை வரவேற்று விட்டு, சமையலறையில் இருந்த பவித்ராவிற்கு ஒரு