சுத்தம் செய்றது தான் கொஞ்சம் கஷ்டம்... அதுக்கு மட்டும் யாராவது வேலைக்கு ஆள் இருக்காங்களான்னு தேடிட்டு இருக்கேன்...”
“என்ன அத்தை நீங்க... கஸ்தூரியை ஹெல்ப்க்கு கூப்பிட்டுக்கோங்க... உங்களுக்கே வேலைக்கு ஆள் வேண்டாம்னா எனக்கு எதுக்கு? நான் சும்மா தானே இருக்கேன்...”
“உனக்கு உடம்பு இன்னும் முழுசா சரி ஆகலையேடா... நீ சும்மா இருக்கிறது தான் சரி... அப்புறம் வேலை வேலைன்னு ஓயாமல் ஓடிட்டே இருப்ப...”
இதற்கு என்ன பதில் சொல்வது என்று கிருத்திகாவிற்கு புரியவில்லை! அவளுடைய வேலை எல்லாம் அவளுக்கு இப்போது நினைவில் இல்லை! பொதுப்படையாக ஏதாவது சொல்லி சமாளிக்கலாமா என்று யோசித்தவள், மனதை மாற்றிக் கொண்டு, “மாமா எங்கே அத்தை? ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காரோ?” என கேட்டு பேச்சை மாற்றினாள்!
“ஆமாடா... இப்போ தான் அவர் ஏதோ ரெஸ்ட் எடுக்குறார்... உன்னை கண்ணுல பார்த்தப்புறம் தான் எங்களுக்கு நிம்மதி... உன்னை அவர் தேடாத இடமில்லை...”
“சாரி அத்தை...” என்றாள் கிருத்திகா வருத்தத்துடன்! எத்தனை முயன்றாலும், தடுக்க முடியாமல் அவளுள் குற்ற உணர்வு ஏற்பட தான் செய்தது! அவள் தவறு செய்தாளா, என்ன தவறு செய்தாள், எதுவும் இன்னமும் பிடிப்படவில்லை! ஆனாலும் ஏதோ பெரிய தவறு செய்து விட்ட குழந்தையாகவே அவ்வப்போது உணர்ந்தாள்!
செவ்வந்தி குழந்தையை செல்லம் கொஞ்சுபவளைப் போல மருமகளின் கன்னத்தில் மெல்ல மென்மையாக தட்டினாள்!
“வாய் நிறைய அத்தை, அத்தைன்னு கூப்பிட்டுட்டு அப்புறம் என்ன சாரி... நீ இப்படி கூப்பிடும் போது எனக்கு அப்படியே ஜில்லுன்னு இருக்கு...”
சொல்லிவிட்டு சிரித்த செவ்வந்தியை அமைதியாக பார்த்தாள் கிருத்திகா.
அவளுக்கு இப்போதும் என்ன சொல்வதென்று புரியவில்லை...!