(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 04 - சசிரேகா

   

ரிஷிகேசன் வீட்டில் அவனது கல்யாணத்திற்க்கு பெண் பார்ப்பது பற்றி எதுவும் அறியாதவன் மாலையில் நந்தினியை காண ஆசைப்பட்டான், அவளது ஞாபகம் அவனுக்கு அதிகமாகவே வர ஆரம்பித்தது. 10 நிமிடத்திற்கு ஒரு முறை அர்ஜூனுக்கு போன் செய்து டார்ச்சர் செய்ய அவன் கோபத்தில் வெடித்தான்

  

அண்ணா போதும் எத்தனை முறைதான் போன் பண்ணுவீங்க நான் வந்துக்கிட்டுதான் இருக்கேன் ஏன் அவசரப்படறீங்கஎன்றான் அர்ஜூன்

  

டேய் அறிவிருக்கா உனக்கு இப்பவே மணி 6 ஆகுது

  

ஆகட்டுமே என்ன இப்ப ஏன் ஆபீஸ்ல வேலை இருக்கா முடிக்கனுமா சொல்லுங்க முடிச்சிடலாம்

  

டேய் அடிவாங்காத 7 மணிக்கு நந்தினியை பார்க்க போகனும்ல

  

பரவாயில்லைண்ணா நாளைக்குப் போறேன் என்ன அவசரம்

  

என்ன அவசரமா நாளைக்கு அவளுக்கு இன்டர்வியூ இருக்கு

  

இல்லைண்ணா வேணாம் நீங்க சொல்ற கம்பெனி வேணாம் நான் என் தங்கச்சிக்கு வேற இடத்தில வேலை பார்த்துட்டேன்

  

வேற இடத்திலயா ஏன் என்னாச்சி

  

அவளை தனியா எங்கயாவது அனுப்ப பயமாயிருக்கு அதான் என் கூடவே நம்ம ஆபிஸ்லயே வேலை வாங்கி கொடுத்துட்டா நானே பக்கத்தில இருந்து பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்

  

நம்ம ஆபிஸ்லயா” என்றான் மகிழ்ச்சியாக

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.