(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

இருந்தாலும் எதுக்கு அவசரப்படற, பொறுமையா இரு இப்பதானே அவளோட பாட்டி இறந்து போனாங்க, ஒரு வருஷம் ஆன பின்னாடி கல்யாணம் செய்யலாம்

  

எதுக்கு ஒரு வருஷம்

  

பின்ன இப்பதானே டெத் முடிஞ்சிருக்கு உடனே எப்படி கல்யாணம் செய்றது”

  

அண்ணா சாவு நடந்த வீட்ல ஒரு மங்களகரமான விசேஷம் நடக்கனும்னு எல்லாரும் சொல்வாங்க பாவம் அவள் வேற தனியா இருக்கா, அவளுக்கு யார் மூலமாவது ஆபத்து வர்றதுக்குள்ள காலா காலத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடறது நல்லதுன்னு நான் முடிவே பண்ணிட்டேன்

  

இல்லைடா நீ தப்பு பண்ற வேணாம் அப்படி செய்யாத தப்பு

  

எது தப்பு எதுவும் தப்பில்லை, நான் போனை வைச்சிடறேன்

  

டேய் இருடா நான் சொல்றதை கேளு தப்பு பண்ணாதஎன சொல்லும் போதே போனை கட்செய்துவிட்டான் அர்ஜூன்

  

போன் கட்டானதும் ஆத்திரத்துடன் தனக்குத்தானே பேசிக்கொண்டான்

  

என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன் மனசுல, திடீர்ன்னு என்ன அண்ணன்னு உரிமை கொண்டாடறான், இப்ப என்ன அவசரம் அவளுக்கு மெதுவாவே கல்யாணத்தை செய்யலாமே அவளே பாவம் எதை எதையோ நினைச்சி கவலையில இருப்பா வன் வேற அவளை கொடுமைப்படுத்தறான், அவள்ட்ட பேச கூட விடமாட்டேங்கறான். பேசாம நாமளே அவளை ஹாஸ்டல்ல சேர்த்திருக்கனும்.

  

அர்ஜுனை நம்பி விட்டதுக்கு இப்ப அவள் எங்க இருக்கா எப்படியிருக்கா போன் நெம்பர் அட்ரஸ் கூட தெரியலை கேட்டாலும் இவன் தரமாட்டேங்கறான். அவளுக்காவது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.