அர்ஜூனிடம்
”சரி சரி உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என சொல்ல அர்ஜூனும் அமர்ந்துக்கொள்ள ரிஷியும் தாத்தா பக்கத்தில் அமர்ந்துக்கொண்டான்
”சொல்லுங்க தாத்தா என்ன விசயம்”
“முதல்ல நீ வந்த விசயத்தை சொல்லு”
“நானா நான் கருணாகரனை பார்க்க வந்தேன்”
“அவனை ஏன் நீ பார்க்கனும்”
“அதுவா தினகரன் புதுசா ஓபன் பண்ற ஷோரூம்ல ஒரு வேலை வேண்டும் அதான்”
“நீதான் ஏற்கனவே வேலையில இருக்கியே”
“நான் என் தங்கச்சிக்கு வேலை தேடி வந்தேன், அப்பாட்ட சொல்லிட்டேன் அவர் சரின்னு சொன்னாரு, மிச்சத்தை பத்தி கருணாகிட்ட கேளுன்னு சொன்னாரு. 2 நாளா என்னால கருணாவை பார்க்க முடியலை, அதான் வீட்ல வைச்சி பார்த்துட்டு அப்படியே வேலையை கன்பார்ம் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்”
“உனக்கு தங்கச்சி இருக்கா சொல்லவேயில்லை”
“சொந்த தங்கச்சி இல்லை தாத்தா சொந்தத்தில தங்கச்சி”
“எங்க இருக்கா”
“ஹாஸ்டல்ல இருக்கா” என அர்ஜூன் சொல்ல உடனே ரிஷியும்
”எந்த ஹாஸ்டல்ல இருக்கா” என கேட்க அவனை கோபமாக பார்த்தான் அர்ஜூன்