”எதுக்குண்ணா கேட்கறீங்க”
“நான் கேட்கல தாத்தா அடுத்து இதைத்தானே கேட்பாரு அதான்”
என சொல்ல தாத்தா ரிஷியைப்பார்த்து
”நான் ஏன் அதை கேட்கனும், எனக்கு என்ன அவசியம், அதான் அவளை பார்த்துக்க அர்ஜூன் இருக்கான், எப்படியும் நல்ல ஹாஸ்டல்லதான் சேர்த்துவிட்டிருப்பான் அப்புறம் என்ன” என சொல்ல ரிஷியோ அமைதியாகி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டான்.
அடுத்து தாத்தா அர்ஜூனிடம்
”கருணா இன்னும் வீட்டுக்கு வரலையே”
“இல்லை நான் பேசிட்டேன் வந்துட்டு இருக்கானாம் வந்த வேலையை முடிச்சிட்டு ஒரேடியா கிளம்பிப் போகலாம்னு இருக்கேன்”
“சரி சரி ரிஷிக்கு என்னாச்சி”
“ஏன் அவர் நல்லாதானே இருக்காரு”
“இல்லையே ஏதோ டிஸ்டர்ப்பா இருக்கான் அவன் முகமே சரியில்லை”
”நான் நல்லாதான் இருக்கேன் தாத்தா” என ரிஷி கத்தவும் அவனைப்பார்த்து முறைத்தார் தாத்தா
”எதுக்குடா இப்ப கத்தற நான் உன்கிட்ட பேசல அர்ஜூன்கிட்ட பேசறேன்”
“அதான் என்ன பேசனும் எதுவாயிருந்தாலும் என்கிட்ட பேசுங்க”