“அதுக்கு என்ன அவசரம் ஒரு வருஷம் போட்டுமே”
“ஏன் இப்ப செஞ்சா என்ன”
”முடியாது நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”
“ஏன் ஒத்துக்கமாட்டீங்க”
”ஏன்னா நந்தினி இப்ப என் பொறுப்பில இருக்கா”
“இல்லைண்ணா நந்தினி இப்ப என் பொறுப்பில இருக்கா அவளுக்கு நான்தான் அண்ணனா கார்டியனா இருக்கேன் ஹாஸ்டல்ல கூட அப்படிதான் சொல்லி அவளை விட்டுட்டு வந்தேன்”
”அதான் நான் பண்ண தப்பு நானே அவளை கூட்டிட்டு போயிருக்கனும் உன்னை நம்பி அவளை விட்டா என்னால அவளை பார்க்க முடியாம பண்ணிட்டியே”
“நீங்க ஏன் அண்ணா அவளை பார்க்கனும்”
“ஏன் நான் பார்க்க கூடாது“
“அதான் நான் கேட்கறேன் நீங்க அவளை லவ் பண்ணலை ப்ரெண்டாவும் பார்க்கலை அப்புறம் ஏன் அவளை பார்க்க ஆசைப்படறீங்க” என ஒரே போடாக போட்டான் அர்ஜூன்
அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தடுமாறி அமைதியாக அமர்ந்தான் ரிஷி. அவனின் அமைதியை கண்டு கோபத்துடன்
”இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடாதீங்க ஆனா அவளுக்காக வக்கனையா பேசுங்க போதும் அண்ணா நீங்க ஏமாத்தி விளையாட நான் அவளை உங்ககிட்ட பலிகொடுக்க மாட்டேன்”