”என்னம்மா ஆச்சி வாய்ஸ் டல்லாயிருக்கு”
“அது ஒண்ணுமில்லைண்ணா சொல்லுங்க”
“அதான்மா நான் உனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்ற நீ சரின்னு சொல்லிட்டா நாளைக்கே நான் கல்யாண புரோக்கரை பார்க்கறேன்”
“அது வந்து அண்ணா” என அவள் தடுமாற அதற்கு அர்ஜூன்
“தயங்காம சொல்லும்மா”
“இவ்ளோ அவசரமா எதுக்குண்ணா கொஞ்ச நாள் போட்டுமே” என அவள் சொல்ல சிரித்தான் ரிஷி. அதைப்பார்த்து முறைத்துவிட்டு
”அப்படியில்லைம்மா இன்னும் கொஞ்ச நாள்ல ரிஷி அண்ணாவுக்கு கல்யாணம் ஆகப்போகுது அப்ப நிறைய வேலைகள் இருக்கும் என்னால உன்கிட்ட பேச முடியாது. உன்னை பத்திரமா பார்த்துக்க முடியாது அதான் உனக்கு முதல்ல கல்யாணம் பண்ணிட்டா நிம்மதியா நான் அண்ணாவோட கல்யாணத்தில வேலை செய்வேன் என்ன சொல்றம்மா”
என அர்ஜூன் சொல்ல ரிஷி அர்ஜூனை பார்த்து முறைத்தான். அதை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பேசினான் அர்ஜூன்
”சரி சொல்லும்மா நாளைக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்”
“அண்ணா”
“சொல்லும்மா”
“நிஜமாவே அத்தானுக்கு கல்யாணமாண்ணா”