”அப்புறம் ஏன் உன்கிட்ட சண்டை போட்டான்”
“அதான் எனக்கும் புரியலை அவர் மனசுல என்ன இருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடியலை.”
“இப்படி சொன்னா எப்படிடா அடுத்த வாரத்தில நான் ரிஷிக்காக பார்த்த 3 பொண்ணுங்களையும் வரசொல்லியிருக்கேன். ரிஷி பாட்டுக்கு வேணாம்னு சொல்லிட்டா பிரச்சனையாகும்”
“எனக்கு புரியுது தாத்தா ஆனா அவர் மனசுல யாருமில்லைன்னுதான் சொல்றாரு”
“அதை நீ நம்பறியா”
“நம்பலைதான் ஆனா அவர் வாயே தொறக்க மாட்டேங்கறாரு”
“நான் வேணா பேசி பார்க்கட்டுமா”
”வேணாம் தாத்தா அவராதான் பேசனும் என்கிட்ட மட்டுமில்ல உங்க வீட்லயும் பேசனும்”
“ஏன்டா என்ன விசயம்”
“அப்படியில்ல தாத்தா என் தங்கச்சிக்கு யாரும் இல்லை தனியாளு வேற, உங்க வீட்ல பாட்டிக்கிட்ட இருக்கனும்னா தைரியம் வேணும், அவளுக்கு சுத்தமா தைரியம் கிடையாது. வெகுளி பொண்ணு வேற, என்னால பொழுதுக்கும் அவளை பார்த்துக்க முடியாது, அந்த வீட்ல யாராவது ஒருத்தர் சப்போர்ட் பண்ணனும், அண்ணா மட்டும் துணையா நின்னு பேசினார்னா பாட்டியால ஒண்ணும் பண்ண முடியாது, இல்லைன்னா 2 நாள்ல என் தங்கச்சியை விரட்டிடுவாங்க அதான் என் பயமே”
“நீ சொல்றதும் சரிதான் என் மனைவி என் 2 மருமகளையும் படாத பாடு படுத்தறா, இதுல உன் தங்கச்சியையும் டார்ச்சர் பண்ணாம விடமாட்டா, ஏற்கனவே அவள் ஒரு பொண்ணை