“நான் ஏமாத்தறேனா”
“ஆமாம் இப்ப கூட உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு புரியது உங்களுக்கும் புரியுது ஆனா வீம்புக்கு சொல்ல மாட்டேங்கறீங்க”
“என் மனசுல ஒண்ணுமில்லை”
“அப்ப சரி நான் அவளுக்கு யாரையாவது பார்த்து கல்யாணத்தை சீக்கிரமா முடிக்கறேன் அவள் கல்யாணம் ஆகி போனாதான் நீங்க வேற பொண்ணைப்பார்த்து கல்யாணம் செஞ்சிப்பீங்க நான் நாளைக்கு புரோக்கரை பார்த்து சட்டு புட்டுன்னு இந்த மாசம் முடியறதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கிறேன்”
“இதுக்கு நந்தினி சம்மதிக்க மாட்டா”
“அவள்ட்ட நான் சம்மதம் வாங்கறேன்”
“அப்படியா சரி இப்பவே கேளு அவள்ட்ட பேசு” என சொல்ல அர்ஜூனும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே
”சரி இப்பவே போன் பண்றேன் எனக்கென்ன பயமா என் பேச்சை என் தங்கச்சி மாட்டேன்னு சொல்லமாட்டா” என நம்பிக்கையாக போன் செய்து அதை ஸ்பீக்கரில் போட்டான் அர்ஜூன்
ரிங் போனது 4 வது ரிங்கிற்கு போனை எடுத்து
ஹலோ” என்றாள் நந்தினி.
3 நாட்களாக அவளின் குரலை கேட்க முடியாமல் தவித்துப்போன ரிஷி அவளது குரலைக் கேட்டதும் துள்ளி குதித்து அர்ஜூனிடம் வந்தான். அர்ஜூனோ போனை தன்னிடமே வைத்துக்கொண்டு விலகி நின்றான்