நம்பி ஏமாறதுக்குள்ள கல்யாணம் செஞ்சி வைச்சிடனும்னு பார்க்கறேன், அப்புறம் நானும் கல்யாணம் செஞ்சிக்கனும்” என்றான் வெட்கத்துடன்
“சரிடா கல்யாணம் செய்ய உன் கிட்ட பணம் இருக்கா”
“இருக்கு தாத்தா, மாசா மாசம் சம்பளத்தில பாதியை பேங்க்ல போட்டு வைச்சிருக்கேன், மாப்பிள்ளை மட்டும் கிடைக்கட்டும், நல்ல முகூர்த்த நாளா பார்த்து கல்யாணத்தை சிம்பிளா முடிச்சிடலாம். ஏன்னா எனக்கும் சரி அவளுக்கும் சரி சொந்த பந்தம்னு யாருமில்லை கோயில்ல வைச்சி கல்யாணத்தை முடிச்சிட்டா போதும்னு நினைக்கிறேன் தாத்தா”
“அதுவும் சரிதான் எதுக்கு ஆடம்பரமா செய்யனும் அந்த பணத்துக்கு உன் தங்கச்சிக்கு எதையாவது வாங்கி போடு”
“கண்டிப்பா தாத்தா அதான் கல்யாண புரோக்கரை நாளைக்கு போய் பார்க்க போறேன்” என அர்ஜூன் சொல்ல ரிஷி உடனே எழுந்துக்கொண்டான்
”அர்ஜூன் வா போலாம்”
“இல்லைண்ணா நான் வரலை கருணா வந்துடுவான் அவன் கிட்ட பேசனும்”
“நாளைக்கு அவனை போய் கம்பெனியில பாரு”
“நாளைக்கு நிறைய வேலைகள் இருக்குண்ணா கல்யாண புரோக்கரை போய் பார்க்கனும்”
“இப்ப என்ன அவசரம் புரோக்கரை அப்புறமாவும் பார்க்கலாம்”
”அதுக்கில்லைண்ணா இப்ப ஆரம்பிச்சாதான் பையன் கிடைச்சி கல்யாணம் முடிய எப்படியும் ஒரு வருஷம் பிடிக்கும் நானும் என் தரப்பில அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்குல்ல”
“என்ன கடமை”