Page 18 of 25
”ஹலோ அண்ணா சொல்லுங்கண்ணா” என அவள் பேச அர்ஜூன் அவளிடம்
”நந்தினி”
“அண்ணா”
“சாப்பிட்டியாம்மா”
”சாப்பிட்டேன் அண்ணா நீங்க சாப்பிட்டீங்களா”
“சாப்பிட்டேன்மா அப்புறம் ஹாஸ்டல் எப்படியிருக்கு”
“போர் அடிக்குது அண்ணா”
”ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்க அப்புறம் உனக்கு போரே அடிக்காது”
“ஓ அப்ப வேலை கன்பார்ம் ஆயிடுச்சாண்ணா”
“நீ வேலையே செய்ய வேணாம். நான் உனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
என சொல்ல அந்த பக்கம் பெருத்த மௌனம். அர்ஜூனும் ரிஷியும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டு அர்ஜூனே அவளிடம்
”ஹலோ நந்தினிம்மா” என அழைக்க
”சொல்லுங்கண்ணா”
என அமைதியான மிகவும் மெலிதான குரலில் பேசியவளிடம்