“ஆமாம்மா”
“அவருக்கும் சம்மதமாண்ணா”
“சம்மதம் இல்லாம போகுமா நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு”
“உங்க விருப்பம் அண்ணா” என சோகமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் நந்தினி.
அவள் பேசியதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த ரிஷி அர்ஜூனிடம்
”உன்னை யாரு இப்ப எனக்கு கல்யாணம்னு அவள்ட்ட சொல்ல சொன்னது. நான் இன்னும் பொண்ணையே பார்க்கலை”
“நீங்க எதுக்கு பார்க்கனும் அதான் உங்க வீட்ல இருக்கறவங்க 3 பேரை பார்த்துட்டாங்களே அதுல ஒண்ணுதான் தாத்தா கன்பார்ம் பண்ணுவாரு, கண்ணை மூடி தாலி கட்ட வேண்டியதுதான் உங்க வேலை அப்புறம் என்ன”
“வாயை மூடு நந்தினி என்னைப்பத்தி என்ன நினைச்சிருப்பா அவள் பேசினதை கேட்டல்ல”
“கேட்டேனே உன் விருப்பம் அண்ணான்னு அவள் சொன்னாளே அப்புறம் என்ன”
“அதுக்கு முன்னாடி அவள் பேசினது கேட்கலையா”
“என்ன பேசினா மறந்துட்டேன் அண்ணா”
“பொய் சொல்லாதடா பாவி நீயெல்லாம் என் உயிர் நண்பனாடா அவள் அப்படியே மனசு உடைஞ்சி போய் பேசினா எனக்கு புரியுது உனக்கேன் புரியலை”
“அப்படியா பேசினா சீ சீ இருக்காதுண்ணா சிக்னல் வீக்காயிருக்கும் அதான் விட்டுவிட்டு கேட்குது”