(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

எனக்கு பசிக்கலை தாத்தாஎன சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டான். அவனின் போக்கை கண்ட தாத்தாவிற்கு சங்கடமாகி போனது. அவர் உடனே அர்ஜூனுக்கு போன் செய்தார்

  

ஹலோ

  

நான்தான் பேசறேன்

  

சொல்லுங்க தாத்தா

  

ரிஷி வீட்டுக்கு வந்தான் சாப்பிடவேயில்லை என்னாச்சி

  

அண்ணாக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி நல்ல டாக்டரா கூட்டிட்டு போய் பார்க்கனும் தாத்தா

  

என்னடா உளர்ற யார்கிட்ட பேசறேன்னு தெரிஞ்சிக்கிட்டு பேசு

  

நல்லா தெரியுது தாத்தா வர வர அண்ணா ஏன் கோபப்படறாரு எதுக்கு கோபப்படறாருன்னு ஒண்ணுமே புரியலை

  

ஏன் என்னாச்சி

  

நீங்களே இந்த நியாயத்தை கேளுங்க தாத்தா என் தங்கச்சிக்கு நான் மாப்பிள்ளை பார்த்தா இவருக்கு என்ன வந்துச்சி, என் கூட சண்டை போட்டு என் பிரண்ட்ஷிப் கட் பண்ணிட்டு போறாரு தாத்தாஎன அவன் சொல்லவும் தாத்தாவின் சந்தேகம் ஊர்ஜிதமாகி அவர் ஹஸ்கி வாய்சில்

  

ஏண்டா ஒருவேளை ரிஷி உன் தங்கச்சியை காதலிக்கறானா என்ன

  

இல்லயே நானும் நிறைய முறை கேட்டுப்பார்த்துட்டேன் இல்லைன்னு சொல்றாரு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.