(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அதான் வரதட்சணைக்கு பணம் சேர்க்கறது நகை நட்டு துணிமணி வாங்கிப்போடறது ஒருவேளை வர்ற மாப்பிள்ளை பைக் கேட்டா வாங்கனும் வீடு இல்லை பிளாட் கேட்டா வாங்கனும் நிறைய இருக்குண்ணா

  

ஏன் இதையெல்லாம் கேட்காத ஒருத்தனுக்கு அவளை கட்டிவை

  

அப்படி யார் இருக்கா சொல்லுங்க இப்பவே கட்டிவைச்சிடறேன்என சொல்ல

  

அதான் நான் இருக்கேனேஎன ரிஷி வார்த்தையை விட தாத்தா உடனே

  

என்னடா சொல்ற

  

இல்லை தாத்தா நான் பார்த்து சொல்றேன்னு சொன்னேன்என தட்டுத்தடுமாறி பதில் சொன்னவனை ஒரு தினுசாக பார்த்தார் தாத்தா. அவரின் பார்வையை பார்க்க முடியாமல் அர்ஜூனிடம் வந்து அவனை கட்டாயமாக எழுப்பி வீட்டை விட்டு அழைத்துக்கொண்டு வண்டியில் ஏற்றிவிட்டு நேராக கெஸ்ட் ஹவுஸ் அடைந்தான் ரிஷி.

  

எதுக்குண்ணா என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க

  

டேய் என்னடா நினைச்சிட்டு இருக்க நீ பாட்டுக்கு எதை எதையோ செய்ற உன்னை கொல்லப் போறேன் பாரு

  

இப்ப நான் என்ன செஞ்சிட்டேன் அண்ணா

  

எதுவும் தெரியாத மாதிரி பேசாதடா ஆமா இப்ப எதுக்கு நீ நந்தினிக்கு கல்யாணம் செஞ்சி வைக்க ஆசைப்படற

  

அண்ணனா என் கடமையை செய்யலாம்னு இருக்கேன்

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.