(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அப்படியா ம் சரி சொல்லு கல்யாணம்னா முதல்ல முடியாதுன்னு சொன்ன நீ எதுக்காக இப்ப சரின்னு சொன்ன, உடனே இன்னிக்கு ஏன் வேணாம்னு சொல்ற என்னாச்சி உனக்கு

  

ஒண்ணுமில்லை தாத்தா அன்னிக்கு கேட்டப்ப நான் சரின்னு சொன்னேன் அதுக்கப்புறம் வீட்ல இருக்கறவங்க 3 பொண்ணுங்களை தேர்ந்தெடுத்தாங்கன்னு சொன்னதும் கஷ்டமாயிருக்கு அதான் வேணாம்னு சொன்னேன்என சொல்லவும் அர்ஜூன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே வெளியில் பொதுவாக தாத்தாவிடம்

  

ஆமாம் தாத்தா நானும் என் தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்

  

எதுக்கு இப்பவே அவசரம் பண்ற அவளை நீ ரொம்ப கொடுமைப்படுத்தறடாஎன ரிஷி வார்த்தைகளை அள்ளி விட தாத்தா ரிஷியை பார்த்து சந்தேகத்துடன்

  

அவன் தங்கச்சிக்கு என்னவோ செய்றான் நீ ஏண்டா கத்தற

  

இல்லை தாத்தா பொண்ணை கட்டாயப்படுத்தறது தப்புன்னு சொன்னேன்

  

அப்படியாஎன சொல்லிவிட்டு அர்ஜூனிடம்

  

என்னடா அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாம கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறியா

  

இல்லை தாத்தா சத்தியமா இல்லை அவள் விருப்பமில்லாம நான் எதையும் செய்ய மாட்டேன். இருந்தாலும் தாத்தா அவள் தனியா இருக்கா பயமாயிருக்கு காலாகாலத்தில ஒருத்தனை பார்த்து கட்டிவைச்சிட்டா நான் நிம்மதியா இருப்பேன் அதான்

  

சரிடா அதுக்கு என்ன அவசரம் உடனே செய்யனுமா என்ன

  

இல்லை தாத்தா அவள் வேற அழகாயிருக்கா, இந்த ஊரு அவளுக்கு புதுசு, யார்கிட்டயாவது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.