(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அறிவிருக்கனும் என்னை விட்டு போனாளே எனக்கு போன் பண்ணி பேசனும்னு தோணிச்சா அவளை சொல்லி என்ன இருக்கு இவனை சொல்லனும் இவன் அவள் மனசை மாத்தியிருப்பான் சரி பார்க்கலாம்

  

இன்னும் 2 நாள்ல சிம் ஆக்டிவேட் ஆயிடும் அப்புறமாவது அவள் எனக்கு போன் பண்றாளான்னு பார்க்கலாம், இல்லைன்னா ஆளுங்களை வைச்சி அர்ஜூனை கடத்தி பிளாக் மெயில் செஞ்சாவது அவளை கண்டுபிடிக்கனும்என குரூரமாக யோசித்தவன் தன்னையே நொந்தும் கொண்டான்

  

சே என்னாச்சி எனக்கு நான் ஏன் இப்படி தப்புத்தப்பா யோசிக்கறேன், நான் எதுக்கு அர்ஜூனை கடத்தனும் முட்டாளாயிட்டேன், அவனோட போனை வாங்கி அதுல நெம்பர் பார்த்தா போகுது. ஆனா அவன் போனை எப்படி வாங்கறது, அவன் தரமாட்டானே எப்படிஎன தன்மனதில் ஆயிரம் திட்டங்களை போட்டுக்கொண்டிருந்தான்.

  

இப்படியே 2 நாட்கள் ஓடிவிட ஆசையாக தன் போனையே பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி. நந்தினியின் போன் வரும் என எதிர்ப்பார்த்தான், ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தவனின்  நிலைமையை பார்த்த தாத்தா அவனிடம்

  

என்னடா என்ன செய்ற 2 நாளா ஆபிஸ்க்கு போகலையாமே

  

ஆமாம் தாத்தா ஆனா நான் ஏன் ஆபிஸ்க்கு போகனும் மீட்டிங் டீலிங் எதுவும் இல்லையே

  

ஆமாம் எதுவும் இல்லைதான் சரி நானும் உன்னை ரெண்டு நாளா பார்க்கறேன் எதையோ யோசிச்சிட்டு இருக்க, போனையே பார்த்துக்கிட்டு இருக்க என்ன ஏதாவது பிரச்சனையா

  

இல்லை தாத்தா அப்படியெல்லாம் எதுவும் இல்லை

  

சரிடா உன்கிட்ட ஒருவிசயம் சொல்லனும்

  

என்ன தாத்தா

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.