(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தப்பு அண்ணா அவள் அட்ரஸ் மாறி வந்தா

  

இருந்தாலும் அவள் எனக்காகத்தான் வந்தா

  

இல்லைண்ணா அவள் தன் மாமாவுக்காக வந்தா

  

என்னை அத்தான்னு கூப்பிட்டா

  

மாமா பையன்னு நினைச்சி தப்பா கூப்பிட்டா

  

இல்லை அவள் என்னை நினைச்சிதான் கூப்பிட்டா

  

சரி கூப்பிட்டு தொலையட்டும், இப்ப என்ன அதுக்கு, இங்க பாருங்கண்ணா உண்மையை சொல்லுங்க நீங்க நந்தினியை காதலிக்கறீங்களா

  

இல்லை இல்லை அப்படியெல்லாம் இல்லைஎன்றான் பதட்டமாக

  

அப்புறம் எதுக்கு அவள்கிட்ட பேசனும் வேணாம், நான் அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்

  

என்னது கல்யாணமா எதுக்கு வேணாம்

  

அண்ணா என்னாச்சி உங்களுக்கு நான் அவளுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கப்போறேன் அதுல உங்களுக்கென்ன வந்தது

  

இல்லை அப்படியில்லை இப்பதான் அவள் இந்த ஊருக்கே வந்திருக்கா திடீர்னு கல்யாணம்னு சொன்னா அவள் தப்பா நினைக்கமாட்டாளா

  

யாரு அவளா? அவள் ஏன் தப்பா நினைக்கப்போறா, எப்படியும் யாரையோ கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுதானே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.